வெளிநாடு செல்வோருக்கான முக்கிய அறிவுறுத்தல்
மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்வாய்ப்புகள் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் விசிட் விசாவுடன் மாத்திரம் பயணிக்க வேண்டாம் என்று வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
முறையான வேலை விசா (Work Visa) மற்றும் வேலைவாய்ப்பைப் பெற்று, அந்த நாடுகளுக்குச் செல்லுமாறு பயணிக்கும் அனைவருக்கும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இது தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது பற்றிக் கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
டுபாய் மற்றும் ஓமான் ஆகிய நாடுகள் தமது நாடுகளுக்கு விசிட் விசா (Visit Visa) ஊடாக நுழைய அனுமதிக்கும் வகையில் தங்கள் சட்டங்களைத் தளர்த்தியுள்ளன. அதனை வேலை கிடைத்த பின்னர், வேலை விசாவாக மாற்ற முடியும்.
ஆனபோதிலும், விசிட் விசாவுடன் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காகச் செல்ல வேண்டாம் என இராஜாங்க அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
முறையான வேலை விசா பெற்றே அந்த நாடுகளுக்குச் செல்லுமாறு அவர் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.