Certificate Courses in Foreign Languages

வெளிநாட்டு மொழிகளில் சான்றிதழ் கற்கைநெறிகள்

(FOREIGN LANGUAGE COURSES)

வெளிநாட்டு மொழி சான்றிதழ் கற்கைநெறிகள்
Sri Lanka Institute of Tourism and Hotel Management (SLITHM)
Certificate Level Courses 
  • Japanese
  • Korean
  • Chinese
  • English
  • German
  • French
  • Russian
Location: SLITHM – Colombo
Course Fee: 30,000/-
Duration: 5 Months (Saturdays, 120 hours)
For More Details:
☎️ Contact Number: 0112208312
WhatsApp: 0707500100 (Messages Only)
Sri Lanka Institute of Tourism and Hotel Management (SLITHM),
Ministry of Tourism and Lands, No – 78, Galle Road, Colombo 03.
Limited Seats Available.
APPLY NOW!

CLICK HERE

வெளிநாட்டு மொழிகளில் சான்றிதழ் கற்கைநெறிகள்

இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் (SLITHM)
சான்றிதழ் கற்கைநெறிகள்
  • ஜப்பானிய மொழி
  • கொரிய மொழி
  • சீன மொழி
  • ஆங்கில மொழி
  • ஜெர்மன் மொழி
  • பிரெஞ்சு மொழி
  • ரஷ்ய மொழி
இடம்: SLITHM – கொழும்பு
கட்டணம்: 30,000/-
காலம்: 5 மாதங்கள்
(120 மணித்தியாலங்கள், சனிக்கிழமைகளில் மாத்திரம் நடைபெறும்)
மேலதிக விபரங்களுக்கு:
☎️ தொலைபேசி இலக்கம்: 0112208312
வாட்ஸ்அப் இலக்கம்: 0707500100 (செய்திகளுக்கு மட்டும்)
இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் (SLITHM),
சுற்றுலா மற்றும் காணி அமைச்சு, இலக்கம் – 78, காலி வீதி, கொழும்பு 03.
வரையறுக்கப்பட்ட ஆசனங்களே உள்ளன. இப்பொழுதே விண்ணப்பியுங்கள்!

பல மொழிகள் தெரிந்தால் பல தொழில் வாய்ப்புகள்!

அறிவியல் வளர்ச்சியானது, முழு உலகையும் நமது கைகளுக்குள்ளே கொண்டு வந்து விட்டது. குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டி விடலாம் என்கின்ற காலம் மாறிப்போய், தற்போது உலகம் முழுக்க நம் எல்லைகளை விஸ்தரிக்கும் வாய்ப்புகள் வந்துவிட்டன.
ஆங்கிலத்தை மட்டும் கற்றுக் கொண்டால், உலகத்தையே சுற்றி விடலாம் என்று பலர் நம்புகின்றனர். உண்மை நிலை அவ்வாறல்ல. ஆங்கிலம் சர்வதேச மொழியாக இருந்தாலும், பல நாடுகளில் அவரவர் தத்தம் தாய் மொழியையே பேசுகின்றனர். தாய் மொழிக்கு முன்னுரிமை கொடுக்கின்ற பல நாடுகள் இன்று உள்ளன. ஆகவே, ஆங்கிலத்தையும் தாண்டி, வேறு பல வெளிநாட்டு மொழிகளையும் கற்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
தாய் மொழியைத் தவிர நீங்கள் அறிந்திருக்கும் ஒவ்வொரு மொழியும் உங்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்பதை ஒருபோதும் மறவாதீர்கள். தமிழ், சிங்கள மொழிகள் தெரிந்தால், இலங்கையில் எங்களால் வேலை செய்ய முடியும். ஆனால் வெளிநாட்டு மொழிகளை நாங்கள் அறிந்தால், உலகின் பல பாகங்களிலும் எமக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.
அத்துடன், நமது சுயவிபரக் கோவையில் எல்லா விடயங்களும் மற்ற எல்லோரைப் போலவே ஒத்திருந்தாலும், நமது மேலதிக மொழித் தேர்ச்சி அதில் உள்ளடங்கினால், நமக்கான வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்படலாம்.
சாதாரணமாக, வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக நேர்முகத் தேர்வுக்கு செல்கின்றவர்களில், மேலதிக மொழியைத் தெரிந்திருப்பவருக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படுவதைக் காண முடியும்.
வெளிநாட்டு மொழிகளில் ஜப்பானிய, கொரிய, சீன, ஆங்கில, ஜெர்மன், பிரெஞ்சு, ரஷ்ய, அரபு மொழிகள் மிகவும் முன்னுரிமை பெறுகின்றன. ஆகவே இவற்றைக் கற்பதில் நீங்கள் சற்றுக் கவனம் கொள்ளுங்கள்.
மற்றும் இன்னுமொரு நாட்டிற்குக் குடியேற நினைக்கும் எவரும் அந்த நாட்டினுடைய மொழியைத் தெரிந்திருப்பது, அவர்களுக்கான குடியுரிமை வாய்ப்பை அதிகரிக்கிறது.
தற்போது இலங்கை அரசு, பல்வேறு நாடுகளுடன் தொடர்பு கொண்டு பல இளைஞர், யுவதிகளை ஜப்பான், கொரியா, மலேசியா, ஐக்கிய அரபு ராஜ்ஜியம் உட்பட பல நாடுகளுக்கு வேலை வாய்ப்புகளுக்கு அனுப்புவதற்குத் தீர்மானித்துள்ளது. ஆகவே, அதிலும் வெளிநாட்டு மொழி தெரிந்தவர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படலாம்.
ஆகவே நீங்கள் எங்கு பணி புரிந்தாலும், எந்தக் பாடநெறியைப் பயின்றாலும் ஏதாவது ஒரு வெளிநாட்டு மொழி கற்கைநெறியைக் கற்றுக்கொள்ள சிறிது நேரம் ஒதுக்குங்கள்.
இன்று பல நிறுவனங்களிலும் பல்வேறு பட்ட மொழிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.
பெரும்பாலான மொழிக் கற்கைநெறிகள் வார இறுதிகளிலேயே நடாத்தப்படுகின்றன. ஆகவே, அதற்கான காலத்தை ஒதுக்குவது நம் அனைவருக்கும் இலகுவானதே.
தற்போது பாடசாலைகளில் கூட வெளிநாட்டு மொழிப் பாடநெறிகளுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படுகின்றன. ஆயினும், மாணவர்கள் அதில் கவனம் செலுத்துவது குறைவாகவே காணப்படுகின்றது. க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளில் வெளிநாட்டு மொழி ஒரு பாடமாகக் காணப்படுவதால், அதற்கு அதிக முன்னுரிமை கொடுத்துக் கற்பது எதிர்காலத் தொழில் வாய்ப்பை உறுதிப்படுத்தும். ஆகவே, உங்களுடைய பிள்ளைகள் மற்றும் மாணவர்களுக்கு அதனுடைய முக்கியத்துவத்தைப் பற்றி இப்போதே கற்றுக் கொடுங்கள்.
சாதாரணமாக ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள, ஒரு நாளைக்கு, ஒரு மணி நேரம் என எடுத்துக் கொண்டால் கூட ஆறு மாதங்களில் அந்த மொழியை நாங்கள் இலகுவாகக் கற்றுக் கொள்ளலாம்.
எனவே, உங்கள் தாய்மொழியைத் தவிர, மற்றுமொரு மொழியைக் கற்றுக் கொள்ள அதிக ஆர்வம் எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் எதிர்காலத்தை மிகவும் செழிப்பாக்கும் என்பது உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *