இன்று முதல் மின்சாரக் கட்டணத்தை 18% ஆல் அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அதற்கமைய, 0 முதல் 30 வரையான அலகுகளுக்கான கட்டணம் 10 ரூபாவில் இருந்து 12 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நிலையான கட்டணம் 150 ரூபாவில் இருந்து 180 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
31 முதல் 60 வரையான அலகுகளுக்கான கட்டணம் 25 ரூபாவில் இருந்து 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிலையான கட்டணமானது, 300 ரூபாவில் இருந்து 360 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
61 முதல் 90 வரையான அலகுகளுக்கான கட்டணம் 35 ரூபாவில் இருந்து 41 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் நிலையான கட்டணம் 400 ரூபாவில் இருந்து 480 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 91 முதல் 120 வரையான அலகுகளுக்கான கட்டணம் 50 ரூபாவில் இருந்து 59 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலையான கட்டணம் 1180 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மூன்றாவது முறையாக மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
▪️0- 30 Units from Rs.150 to Rs. 180
▪️31- 60 Units from Rs.300 to Rs. 360
▪️61- 90 Units from Rs.400 to Rs. 480
▪️91- 120 Units from Rs.1,000 to Rs.1,180
▪️121- 180 Units from Rs.1,500 to Rs.1,770
▪️Over 180 units from Rs. 2000 to Rs.2,360
The Public Utilities Commission of Sri Lanka (PUCSL) has granted approval for the Ceylon Electricity Board to increase electricity tariffs by 18% with effect from today.