Human Resource Management Online Course

ஒன்லைன் இலவச பாடநெறி

(Online Free Course)

Polish 20220830 092639032

 

மனித வள முகாமைத்துவம் (Human Resource Management)

 

விண்ணப்பிக்க எதிர்பார்க்கப்படுவோர்:

  • பட்டதாரிகள்
  • இளங்கலைப் பட்டதாரிகள்
  • NVQ, டிப்ளோமோ/HND
  • முதலாளிகள் மற்றும் பணியாளர்கள்

பாடநெறி தொடர்பான தகவல்கள்:

  • பாடநெறியின் வகை: ஒன்லைன் (Online)
  • மொழி: ஆங்கிலம் (English)
  • பாடநெறிக் கட்டணம்: இலவசம்
  • காலம்: 04 மாதங்கள்
  • நேரம்: வாரத்திற்கு 4 – 6 மணித்தியாலங்கள்
  • சான்றிதழ் வழங்கப்படும்.
  • பதிவுக் காலம்: 02 வாரங்கள் (2022.08.28 – 2022.09.20)
  • பாடநெறி ஆரம்பம்: 2022.09.20
  • பாடநெறி முடிவு: 2022.12.31

 பாட உள்ளடக்கம்

 1. HRM ஓர் அறிமுகம்
 2. HRM திட்டமிடல்
3. ஆட்சேர்ப்பு மற்றும் தேர்வு
4. செயல்திறன் முகாமைத்துவம்
5. இழப்பீடு மற்றும் வெகுமதி முகாமைத்துவம்
6. தலைமைத்துவம் மற்றும் ஊக்குவித்தல்
7. பயிற்சி மற்றும் அபிவிருத்தி
8. பணியாளர்/ தொழிற்துறை உறவுகள்
9. முகாமைத்துவ மாற்றம்
10. பிரச்சினைகளைக் கையாளுதல் மற்றும் ஆலோசனை வழங்குதல்.
11. HRM இல் IT யின் பங்கு
12. அடிப்படைத் தொழிலாளர் சட்டங்கள்

 

இந்த இலவசப் பாடத்திட்டத்தின் இறுதியில், சிறந்த மனிதவள முகாமைத்துவம் மூலம் பல்வேறு நிறுவனங்களின் செயல்திறனை விருத்தி செய்ய உதவும் வெற்றிகரமான HR நடைமுறைகளை உருவாக்கி, செயல்படுத்தத் தேவையான திறன்களை மாணவர்கள் பெறுவார்கள்.

விண்ணப்பித்த பின்னர், மாணவர் கையேடு மற்றும் பிற வழிகாட்டுதல்களை மின்னஞ்சல் மூலம் நீங்கள் பெறுவீர்கள்.

( விண்ணப்ப கால எல்லை முடிவடைந்தது. அடுத்த முறை முயற்சிக்கவும்)

மனித வள முகாமைத்துவத்தினைக் கற்றுக் கொள்வதன் முக்கியத்துவம்

மனிதவளங்கள் இயங்கக்கூடியதும், சக்திமிக்கதுமான உயிருள்ள வளங்களாகும். மனித வளங்களுக்கு சிந்தித்து உணர்ந்து செயல்படுவதற்கான சக்தி காணப்படுகின்றது.

மனிதவளங்களின் பெறுமதியானது, காலத்திற்குக்காலம் அதிகரிக்கக் கூடியது. மனிதவளங்கள் தமக்கான கொடுப்பனவைத் தீர்மானிப்பதற்கான சக்தியைக் கொண்டுள்ளது. அத்துடன், மனிதவளங்கள் ஒழுங்கமைக்கக்கூடிய சக்தியையும் கொண்டுள்ளது. மனிதவளங்கள் மிகச் சிக்கலானதும், எதிர்பார்க்க முடியாததுமான இயல்புகளைக் கொண்டுள்ளன.

ஏனைய எந்தவளத்திலும் காணமுடியாத புத்துருவாக்கக்கூடிய சக்தியை மனித வளம் கொண்டுள்ளது. மனித வளங்களே ஏனைய அனைத்து வளங்கள் சார்பாகவும் முடிவுகளை எடுக்கின்றன. ஏனைய வளங்களை முகாமை செய்யவேண்டிய பொறுப்பும், அதிகாரமும் மனித வளத்திலேயே தங்கியிருப்பதனால், இதனைப் பற்றிய அறிவு அனைத்து மாணவர்களுக்கும் மிகவும் அவசியமாகும்.

முகாமைத்துவம் என்றால் என்ன என்பது பற்றி நோக்குகின்ற போது, பௌதிக மற்றும் மனித வளங்களை உள்ளீடாகக் கொண்டு முகாமைத்துவ செயன்முறைகளுக்கான திட்டமிடல், வழிநடத்தல், ஒழுங்கமைத்தல் மற்றும் கட்டுப்படுத்தல் போன்ற கருமங்களூடாக நிறுவன குறிக்கோளை அடைந்து கொள்கின்ற ஒரு செயன்முறை என்று கூறலாம்.

இன்றைய நவீன உலகத்தில் முகாமைத்துவத்தில் மனித வள முகாமைத்துவம் மிக முக்கியமான ஒரு அங்கமாகக் காணப்படுகின்றது.

இதன் காரணமாகவே,  எல்லா நிறுவனங்களும் சரியான நபரை, சரியான வேலைக்கு, சரியான நேரத்தில் அமர்த்துவதில் அதிக அக்கறை காட்டுகின்றன. பொதுவாக மனித வள அபிவிருத்தியானது, நிகழ்கால, எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக, நிறுவன உறுப்பினர்களது திறன்களை விருத்தி செய்து கொள்வதற்காக, நிறுவனங்களில் வழங்கப்படும் முறையான, சரியான, திட்டமிடப்பட்டதுமான ஒரு சிறந்த நடவடிக்கை என வரைவிலக்கணப்படுத்தலாம்.

அனைத்து நிறுவனங்களும் மிகச் சிறந்த நிலையினை அடைவதனையே விரும்புகின்ற போதும், மனித வள அபிவிருத்தியானது, சில கடினமான சவால்களை நிச்சயம் எதிர்கொள்ள வேண்டி ஏற்படுகின்றது.

இத்தகைய கடினமான சவால்களில் முக்கியமான ஒன்றாக திறனிற்கும், தேவைப்பாட்டிற்கும் இடையேயான இடைவெளியைக் குறைவடையச் செய்தலைக் கூற முடியும். எந்த நிறுவனம் மிகவும் திறன்மிக்க, சக்திவாய்ந்த ஊழியர்களைக் கொண்டிருக்கின்றதோ, அந்த நிறுவனத்தினால் ஏனைய அனைத்து போட்டி நிறுவனங்களிலிருந்தும் மேலோங்கி மிகச்சிறப்பாக இயங்க முடியும்.

மனிதவள முகாமைத்துவம் கொண்டுள்ள பல முக்கியமான தொழிற்பாடுகளில் மனிதவள அபிவிருத்தியும் ஒன்றாகும். அதேவேளை, இம்மனிதவள அபிவிருத்தியானது, பயிற்சி, அபிவிருத்தி, நிறுவன அபிவிருத்தி மற்றும் தொழில் அபிவிருத்தி போன்ற தொழிற்பாடுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

குறிப்பாக வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில், இம்மனித வள அபிவிருத்தியானது, மிகவும் அவசியமானதாகவும், தேவையான ஒன்றாகவும் உள்ளது.

Join Our MASTER WhatsApp Group: Click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *