இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான திறந்த எழுத்துமூலப் போட்டிப் பரீட்சை – 2025
Station Master பரீட்சை வழிகாட்டல் குழுவில் இணைந்து கொள்ள… – Click here (Join Now)
விண்ணப்பம் கோரப்படும் பதவி – புகையிரத நிலைய அதிபர் தரம் III
சம்பள அளவுத்திட்டம் – புகையிரத நிலைய அதிபர் – தரம் III ஆம் தரத்திற்கான சம்பள அளவுத்திட்டம் 57,810-5×890-5×1030-5×1300-10×1340-6 = 93,810/=
கல்வித் தகைமைகள் –
(i) சிங்களம்/தமிழ்/ ஆங்கிலம் உடன் கணிதம் மற்றும் வேறு பாடங்கள் இரண்டில் திறமைச் சித்தியுடன், ஒரே அமர்வில் ஆறு (06) பாடங்களில் க.பொ.த.(சா./த) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
(ii) க.பொ. த. (உ/த) பரீட்சையில் மூன்று (03) பாடங்களில் (பொதுவான பொதுப் பரீட்சை தவிர்ந்த) ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல், பழைய பாட சிபாரிசின்கீழ் மூன்று (03) பாடங்களில் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.!
உடற்தகுதி-
- சகல விண்ணப்பதாரிகளும் இலங்கையின் எப்பிரதேசத்திலும் சேவை புரிவதற்கான சிறந்த உடற் தகுதிகளை பெற்றிருத்தல் வேண்டும்.
பதவியின் கடமைகளை மேற்கொள்ளக் கூடியளவுக்கு போதுமான உடற் தகுதிகளையும் உளத் தகுதியையும் கொண்டிருத்தல் வேண்டும்.
உயரம் 05 அடி 04 அங்குலத்திற்கு குறையாமலும், நெஞ்சளவு 32 அங்குலத்திற்கு குறையாமலும் இருக்க வேண்டும்.
6/6 அளவு கண்பார்வை சோதனையிலும் சித்தியடைய வேண்டும்.
வயது: 18 – 30
வேறு தகைமைகள்.-
(i) இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும்.
(ii) விண்ணப்பதாரி சிறந்த குணநலமுடையவராக இருத்தல் வேண்டும்.
(III) ஆண் விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்.
√ Exam: September 2025
√ No. of Vacancies: 106
ஆட்சேர்ப்பு செய்யும் முறை – திறந்த எழுத்து மூலப் போட்டிப் பரீட்சை நடாத்தி, விண்ணப்பதாரிகள் பெற்றுக்கொள்ளும் புள்ளிகளின் திறமையின் ஒழுங்கு வரிசையின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்படுவர்.
பரீட்சை வினாத்தாள்கள்
01. மொழித்தேர்ச்சி – 01 மணி 30 நிமிடம்
02. நுண்ணறிவு – 01 மணித்தியாலம்
Station Master பரீட்சை வழிகாட்டல் குழுவில் இணைந்து கொள்ள… – Click here (Join Now)