அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான பரீட்சை இம்மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதற்காக நாடு முழுவதும் 341 பரீட்சை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது பரீட்சார்த்திகளுக்கு அனுமதி அட்டைகளை அனுப்பும் வேலைகளை பரீட்சை திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில், மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அவர்கள் நியமனம் பெறவுள்ளனர்.
அத்துடன், மாகாண பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு வருடா வருடம் மாகாண சபைகள் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.