நாட்டில் மீண்டும் கொரோனா தலைதூக்கும் அபாயம்!

Polish 20230427 170407094 1

இலங்கையில் மீண்டும் தற்போது கொரோனா தொற்று நோயாளர்கள் இனங்காணப்படுவதால், நாட்டில் மீண்டும் கொரோனா தலைதூக்கும் அச்சம் உருவாகியுள்ளதாக அஞ்சப்படுகிறது.

நேற்று மாத்திரம், நாட்டில் ஏழு பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி, இதுவரை 6,72,143 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.



கடந்த சில நாட்களாக நாட்டில் மீண்டும் மீண்டும் கொரோனா தொற்று நோயாளர்கள் இனங்காணப்படுவதன் காரணமாக, மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பேணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அண்டைய நாடான இந்தியாவில், கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக, இலங்கையிலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள்
எழுந்துள்ளது.




அத்துடன், இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக இலங்கை சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நீண்ட காலத்திற்குப் பிறகு, யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர், உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.