தேசிய கல்வியியல் கல்லூரி நேர்முகத் தேர்வுகளில் குளறுபடி

தேசிய கல்வியியல் கல்லூரி நேர்முகப்பரீட்சை தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் மாணவர்களால் மற்றும் ஏனையோரால் முன்வைக்கப்பட்டுள்ளன.

தகைமையுள்ளோரைத் தவிர்த்து, தகைமை குறைந்தோரை நேர்முகப் பரீட்சைக்கு அழைத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் வெளிவந்துள்ளன.

தேசிய கல்வியியல் கல்லூரிகளில் மாணவர்களை ஆட்சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக பல குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கின்றன.

இக் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து தேசிய கல்வியியல் (பதில் கடமை நிறைவேற்று) ஆணையாளரை பதவியில் இருந்து நீக்கவுள்ளதாக கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.

அருகிலுள்ள கல்வியல் கல்லூரியில் நேர்முகப் பரீட்சை நடாத்த பணிப்புரை விடுக்கப்பட்ட போதிலும், ஆங்கிலப் பாடத்திற்கான நேர்முகப் பரீட்சைக்காக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட விண்ணப்பதாரிகள் பேராதனை கல்வியியல் கல்லூரிக்கு அழைக்கப்பட்டதாகவும் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், பல பாடங்களுக்கான நேர்முகப் பரீட்சை பட்டியலில் குளறுபடிகள் காணப்படுவதுடன், இனரீதியான பாகுபாடுகள் இடம் பெறுவதாகவும் விண்ணப்பதாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர் குற்றச்சாட்டுக்களையடுத்து, கல்வியியல் கல்லூரி ஆணையாளர் எச்.வீ.எம். சஞ்சீவனியை குறித்த பதவியிலிருந்து நீக்கம் செய்யவுள்ளதாக கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.