அனைத்து அரச அலுவலகங்களிலும் பணியாற்றும் அரச அலுவலர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும், அதற்கென சுயஓய்வுப் பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளாதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இச் சுயஓய்வுப் பொறிமுறை மூலம், திறமை குறைந்த அரச ஊழியர்கள் நீக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச பணியில் புதிய ஆட்சேர்ப்புகள் இனி இடம்பெற மாட்டாது என்றும், குறிப்பிட்ட அரச அலுவலகத்தில் உள்ள வெற்றிடங்கள் தற்போது உள்ள அரச துறை அலுவலகங்களினால் பூர்த்தி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
“உதாரணமாக, தற்போது புதிதாக 29,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அவர்கள் அரச துறையிலுள்ள ஊழியர்களில் இருந்து, பரீட்சை முறையின் மூலம் தெரிவு செய்யப்படுவார்கள்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.