Japan Job Vacancies

ஜப்பானிய வேலை வாய்ப்புகள்!

(JAPANESE JOB OPPORTUNITIES)

– Vocational Training Authority

 

Polish 20220831 163935783

பின்வரும் கற்கைநெறிகளில் நீங்கள் NVQ தகைமையைப் பெற்றிருந்தால், இது உங்களுக்குத்தான்!

  • Cook
  • Welder
  • Plumber
  • Electrician
  • Wood Craftsman
  • Quantity Surveyor
  • Food & beverage
  • Refrigeration & Air Condition

மேலே உள்ள ஒன்றில் நீங்கள் NVQ தகுதியை ஏற்கனவே பெற்றிருந்தால், ஜப்பானிய வேலை வாய்ப்புகளுக்கு நீங்கள் பதிவு செய்ய முடியும்…

 

இதற்காக நீங்கள் கொண்டிருக்க வேண்டிய மேலதிக தகமைகள் பின்வருமாறு;

  1. நீங்கள் சிறந்த ஆரோக்கியம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
  2. உடலில் பச்சை குத்தி இருக்கக் கூடாது.
  3. நீதிமன்றங்களால் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு இருத்தல் ஆகாது.

இந்த வேலை வாய்ப்புகளுக்காக ஜப்பானிய மொழிப் பயிற்சி உங்களுக்கு VTA நிறுவனத்தினால் இலவசமாக வழங்கப்படும்.

இந்த வேலை வாய்ப்புகள் தொடர்பில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், கீழே தரப்பட்டுள்ள கூகுள் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

 

விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.

CLICK HERE

 

மேலதிக  தொடர்புகளுக்கு

01102592070

(அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளவும்)

 

 

 

ஜப்பான் நாட்டில் பணிபுரிவதனால் எமக்குக் கிடைக்கும் நன்மைகள்

 

நீங்கள் ஒரு தொழில் தகைமையைக் கற்றவராக இருந்தால், மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் பணிபுரிய இது உங்களுக்கான ஒரு நல்ல சந்தர்ப்பமாகும். இந்த நல்ல சந்தர்ப்பத்தினை தற்போது இலங்கை அரசு உங்களுக்காக வழங்குகிறது. உங்கள் எதிர்காலக் கனவை நீங்கள் இப்போதே நனவாக்கிக் கொள்ளலாம்.

ஜப்பான் உலகளாவிய ரீதியில் ஒரு சிறந்த நாடாகும். இரண்டாம் உலகப் போரின் பின்னர், ஜப்பான் மீண்டும் தன்னை எவ்வாறு புனரமைத்துக் கொண்டது என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம்.  நீங்கள் ஜப்பானில் பணிபுரிய விரும்பினால், ஜப்பானில் பணி புரிய மிகச் சிறந்த காரணங்களை நாம் உங்களுக்கு வழங்குகிறோம்.

சர்வதேச ரீதியில், தொழில்நுட்ப ரீதியாக மிகவும் முன்னேறிய நாடுகளுள் ஜப்பானும் ஒன்றாகும். சந்தேகத்திற்கு இடமின்றி ஜப்பான் வர்த்தக ரீதியாக மிகவும் முன்னேறிய ஒரு நாடு.

ஜப்பானில் உள்ள பல நிறுவனங்கள் மருத்துவப் பாதுகாப்பு, உணவு, விடுதி, சில பயணச் செலவுகள், ஓய்வூதியம் போன்ற பல ஊழியர் சலுகைகளை வழங்குகின்றது.

ஜப்பானுக்கு சென்றால் நீங்கள் நேர முகாமைத்துவத்தினைக் கற்றுக் கொள்ளலாம். இது உங்கள் அன்றாட விடயங்களை நேரத்திற்குச் செய்ய உதவுகிறது. ஜப்பானில் நல்ல சுத்தமான, தூய்மையான சூழல் காணப்படுகின்றது. வாழ்வதற்கு, தொழில் புரிவதற்கு மிகச் சிறந்த இடமாக அது காணப்படுகிறது.

ஜப்பான் என்றால், முதலில் நம் நினைவுக்கு வருவது அதிநவீன தொழில்நுட்பம், கடின உழைப்பாளிகள், வேகமான ரயில் சேவை, தூய்மையான மற்றும் பாதுகாப்பான சூழல், கண்ணியமான மனிதர்கள். ஜப்பான் பயணித்தால், உங்கள் வாழ்க்கை அனுபவம் மேலும் மேம்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

மருத்துவம், விஞ்ஞானம், பொறியியல் முதல் விண்வெளி ஆராய்ச்சி வரை பல துறைகளில் முன்னணி சக்தியாக ஜப்பான் தன்னை நிரூபித்துள்ளது. மேலும் அங்கு மிகச்சிறந்த கல்விச் சமூகம் உள்ளது. அதனால் அங்கு நீங்கள் பணி புரிகின்ற போது, உங்கள் பிள்ளைகளை மிகச் சிறந்த பாடசாலைகளில் அங்கே சேர்க்க முடியும். அதன் மூலம் மிகச் சிறந்த கல்வியை உங்களுடைய பிள்ளைகளுக்கு நீங்கள் பெற்றுக் கொடுக்கலாம்.

ஜப்பானிய நிறுவனங்கள் எப்போதும் தொடர்ச்சியான முன்னேற்றத்தை நோக்கியே பயணிக்கிறது. அதேநேரம், அவர்கள் அடிக்கடி ஊழியர்களை பணிநீக்கம் செய்வதில்லை. ஜப்பானில் பணி புரிகின்ற போது, நீங்கள் சிறந்த சம்பளத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும், ஜப்பானிய மக்கள் மிகவும் அன்பானவர்கள். நம்முடன் மிகச் சிறந்த முறையில் பழகுகின்றவர்கள்.

ஜப்பான் அதிநவீன தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தி வருவதனால், ஆசியாவில் இருந்து, அதிக தொழில்நுட்பப் பட்டதாரிகளை பணிக்கு அமர்த்தத் திட்டமிட்டுள்ளது. ஆகவே உங்களிடம் ஏதேனும் தொழில் தகைமை இருப்பின், ஜப்பானில் பணிபுரிய இது ஒரு மிகச் சிறந்த சந்தர்ப்பம். இதனை ஒருபோதும் தவற விடாதீர்கள். இப்போதே விண்ணப்பியுங்கள்.

ஜப்பானில் பணி புரிவதற்கான காரணங்களைத் தவிர, அங்குள்ள இயற்கைக் காட்சிகள், அற்புதமான ரயில் பயணங்கள், பாரம்பரியங்கள் மற்றும் பழைமையான கலாச்சாரம், அற்புதமான நடனம் போன்ற அனுபவங்களையும் ஜப்பான் வழங்குகின்றது.

ஜப்பானின் பொருளாதாரம் ஒரு சுழற்சி முறைப் பொருளாதாரம் ஆகும். ஜப்பானுக்கு நாங்கள் பயணிக்கின்ற போது அங்கு பல புராதன இடங்களைப் பார்க்க முடியும்.

ஜப்பானில் தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, சில முகவர்கள் கடந்த காலங்களில் மோசடி செய்திருக்கின்றனர். அவ்வாறான மோசடிகளில் சிக்காமல், தற்போது உங்களுக்காக இலங்கை அரசு இலவசமாக வழங்கும் இந்தச் சந்தர்ப்பத்தினை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்துங்கள். இதனூடாக, இலங்கையரின் தொழிற்கல்வி மட்டம் ஜப்பானியரின் தொழிற்கல்வி மட்டத்திற்கு உயர வழி ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *