குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக சமுர்த்தி தொகையை விடவும், 03 மடங்கு அதிகமான நிவாரணம் அஸ்வெசும நலன்புரி திட்டத்தினூடாக வழங்கப்படுவதாக, போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய திட்டத்தில், நாட்டில் வறிய மக்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அந்த வறுமைக்கு ஈடுகொடுக்கும் முகமாகவே, அஸ்வெசும சமூக பாதுகாப்பு வேலைத்திட்டமானது செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஒப்பந்ததாரர்களுக்கு செலுத்த வேண்டியிருந்த 361 பில்லியன் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், 03 மாதங்களுக்குள் புதிய ஒப்பந்தங்களுக்கான கொடுப்பனவுகளும் முழுமையாக வழங்கப்படும். ஜூன் மாதத்துக்குப் பிறகு, தடைபட்ட அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Join Our MASTER WhatsApp Group | Click here |