எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி இடம்பெறவுள்ள கிராம உத்தியோகத்தர் தரம் – 3 க்குரிய போட்டிப் பரீட்சை பற்றி பலரும் இப்போது வரை சந்தேகத்துடனேயே காணப்படுகின்றனர்.
இப்பதவிக்கு 28.05.2021 ஆம் திகதி உடைய வர்த்தமானியின் மூலம் ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டது.
தற்போது விண்ணப்பித்த பரீட்சார்த்திகளுக்கான பரீட்சையே டிசம்பர் இரண்டாம் திகதியில் நடைபெறவுள்ளது. மாறாக, புதிய விண்ணப்பம் எதுவும் தற்போது கோரப்படவில்லை.
பரீட்சை முறை மற்றும் ஆட்சேர்ப்பு பற்றிய அத்தனை விடயங்களும் குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டதற்கு அமையவே இடம்பெறும்.
குறித்த காலத்தில், நீங்கள் விண்ணப்பித்த பிரதேச செயலகத்தில் நிலவிய வெற்றிடங்களுக்கு ஏற்பவே, நியமனம் வழங்கும் சந்தர்ப்பம் அதிகமாக உள்ளது.
குறித்த பரீட்சையில், பிரதேச செயலகத்துக்குள் அதிக புள்ளிகளை பெறுபவர்களுக்கு அதிக வாய்ப்புண்டு. அதேவேளை, நேர்முகப் பரீட்சையிலும் நீங்கள் கட்டாயம் புள்ளிகளைப் பெறவேண்டிய தேவையுள்ளது.
இதில், இரு பரீட்சைத் தாள்கள் காணப்படுகின்றன. பொதுஅறிவு மற்றும் நுண்ணறிவு ஒரு பரீட்சையாகவும், மொழித்திறன் ஒரு பரீட்சையாகவும் தலா ஒன்றரை மணித்தியாலங்கள் நடைபெறும்.
இவ்விரண்டு தாளிலும் ஆகக் குறைந்தது 40 புள்ளிகளுக்கு மேல் பெறுபவர்களே, இப்பரீட்சையில் சித்தியடைந்தவர்களாகக் கருதப்படுவர்.
பரீட்சை பெறுபேற்றுக்குப் பின்னர், ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் அந்த நேரத்தில் நிலவிய வெற்றிடத்தின் எண்ணிக்கையினைப் போல இரு மடங்கானவர்கள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர்.
நேர்முகப் பரீட்சையில் பெற்ற புள்ளிகளும், பரீட்சையில் பெற்ற புள்ளிகளும் கூட்டப்பட்டு, அதிகூடிய புள்ளிகளைப் பெறுபவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படும்.
நேர்முகப் பரீட்சையில், நமது கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தேவையான ஆவணங்கள் பரிசீலிக்கப்படும்.
நடைபெறவுள்ள கிராம உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில், நாடளாவிய ரீதியில், 2238 கிராம உத்தியோகத்தர்கள் 2024 பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்னர் நியமிக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உன்னத பணியில் இணைய உத்வேகத்துடன் காத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!
▪️கிராம உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சைக்கான பொது அறிவு வினா விடைகள்: Click here
▪️JOIN OUR WHATSAPP GROUP: CLICK HERE