WOMEN ENTREPRENEURSHIP TRAINING

WOMEN ENTREPRENEURSHIP TRAINING
– இலவச சுயதொழில் முயற்சியாளர் பயிற்சிநெறி

 

WOMEN ENTREPRENEURSHIP TRAINING

 

  • Free Admission
  • Fee: Free
  • Duration: 12 weeks
  • Closing Date: 12.09.2022
  • Conducted by: American Corner – Jaffna

 

Course Content:

  1. Accounting
  2. Communication Skills
  3. Marketing & Branding

 

For further Details: 0212220665 / 0764426720

American Corner Jaffna, 23, Aththiyadi Road, Nallur, Jaffna.

 

கற்கைநெறி தொடர்பான விபரங்கள் (தமிழில்)

  • கட்டணம்: இலவசம்
  • காலம்: 12 வாரங்கள்
  • விண்ணப்ப முடிவுத்திகதி: 12.09.2022
  • நடாத்துவோர்: அமெரிக்கன் கார்னர் –  யாழ்ப்பாணம்

 

கற்கைநெறி உள்ளடக்கம்

  1. கணக்கியல்
  2. தொடர்பாடல் திறன்கள்
  3. சந்தைப்படுத்தல்

மேலதிக தகவல்களுக்கு

0212220665 / 0764426720

அமெரிக்கன் கார்னர் – யாழ்ப்பாணம், 23, அத்தியடி வீதி, நல்லூர் யாழ்ப்பாணம்.

 

இப்பொழுதே விண்ணப்பியுங்கள்.

Apply Now!

CLICK HERE

 

 

 

 

பெண்களுக்கான சுய தொழில் வாய்ப்புகள் (சிறு கட்டுரை)

இன்றைய காலத்திலே பெண்களுக்கென பரந்த அளவில் சுயதொழில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. முன்பெல்லாம் அவர்கள் தையல் வேலை, ஊறுகாய் செய்தல், அப்பளங்கள், கைப்பணிகள் செய்தல் போன்றவற்றையே சுய தொழில்களாக செய்து வந்தார்கள். ஆனால் 21 ஆம் நூற்றாண்டில், அது மேலும் விருத்தியடைந்து தற்போது பல வாய்ப்புகள் திறந்து கிடக்கின்றன. அவற்றை எவ்வாறு அறிந்து கொள்வது, எவ்வாறு வழிகாட்டுவது என்பது பற்றி தற்போது இச்சிறு கட்டுரையில் நாங்கள் நோக்கலாம்.

தற்போதைய காலத்திலே பெண்கள் வேலைக்குச் செல்லும் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. கிராமப்புறங்களில் விவசாய வேலைகள், கட்டட வேலைகள் மற்றும் பல வேலைகளுக்கு பெண்கள் செல்கின்றனர். நகர்ப்புறங்களில் அலுவலக வேலைகளுக்குச் செல்கின்றனர். தற்போது அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவின் காரணமாகவே பெண்கள் இவ்வாறு வேலைக்குச் செல்கின்றார்கள். ஆண்களைப் போலவே தற்போது பெண்களும் உழைக்க வேண்டிய தேவை ஒவ்வொரு குடும்பத்திலும் வந்துவிட்டது எனலாம்.

பெண்களுக்காக இன்று பல தொழில் வாய்ப்புகள் நமது சமூகத்திலேயே நிறைந்து கிடைக்கின்றன. பெண்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ பல்வேறு வியாபாரங்களை ஆரம்பிக்கலாம். இணையத்தளத்தில் அதிகமான வேலை வாய்ப்புகள் அவர்களுக்கு உள்ளன. ஹோட்டல்கள் கூட ஆரம்பிக்கலாம். இல்லாவிட்டால் வீடுகளில் இருந்து சமைத்து விற்பனை செய்யலாம். பண்ணைகள் அமைத்தல், கைப்பணி பொருட்கள் செய்தல், தமது சூழலில் காணப்படும் பொருட்களை வைத்து எமது தொழில் முயற்சிகளைக் கூட நாங்கள் துவங்க முடியும். பெண்கள் இன்று அரசியலுக்கே வந்து விட்டனர். ஆகவே அவர்களால் எதையும் செய்ய முடியும் என்கின்ற தன்னம்பிக்கை இன்று வந்துவிட்டது.

இது தொடர்பான பயிற்சி அமர்வுகள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்களை அரசு மற்றும் பல்வேறு நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. இதில் கலந்து கொள்வதன் ஊடாக சுய தொழில் வாய்ப்புகள் பற்றி அறிந்து கொள்வதுடன், தங்களது திறன்களையும் அவர்கள் விருத்தி செய்து கொள்ள முடியும். இது தொடர்பான கற்கைநெறிகளை நிறைவு செய்பவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கொண்ட சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதன் ஊடாக அவர்களுக்கு வங்கிக் கடன்கள், அரச மானியம் மூலமான சலுகைகளைப் பெற முடியும்.

புதிதாக தொழில் தொடங்குபவர்கள் அவர்களுடைய சான்றிதழ், இயந்திரங்களுக்கான செலவு மதிப்பீடுகள், தொழில் உரிமம், அனுபவ சான்றிதழ்களை வங்கிகளுக்கு சமர்ப்பித்து, கடன் பெற்று அவர்களுடைய தொழில்களைத் துவங்க முடியும்.

இவ்வாறான தொழில் முயற்சிகளை துவங்குவதற்கு முன்னர், அவற்றுக்கான திறன்களைப் பெற்றுக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாகும். அவற்றைச் சரியான முறையில், நேர்த்தியான முறையில் கற்றுக் கொள்வதன் ஊடாக அவர்களால் மிகச்சிறந்த ஒரு தொழில் அதிபராக தம்மை மாற்றிக் கொள்ள முடியும்.

இவ்வாறான ஒரு அரிய சந்தர்ப்பத்தை அமெரிக்க கார்னர் – யாழ்ப்பாணம் தற்போது உங்களுக்கு இலவசமாக வழங்குகின்றது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான இணைப்பு மேலே உள்ளது. நீங்கள் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் உங்களுக்கான மேலதிக தகவல்கள் மின்னஞ்சல் மூலமாக அறிவிக்கப்படும்.

சுயதொழில் செய்ய நம்பிக்கை கொண்டுள்ள அனைத்துப் பெண்களும் இதில் கலந்து பயன் பெறுங்கள். அத்துடன் ஏனைய பெண்களுக்கும் இதனை அனுப்பி அவர்களுக்கும் உதவி புரியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *