Free Certificate Course (Digital Media)

FREE CERTIFICATE COURSE!
VALUES FOR DIGITAL COMMUNITY

VALUES FOR DIGITAL COMMUNITY

 

Conducted by: American Corner – Jaffna 
  • Fee: Free
  • Duration: 05 Weeks
  • Age: No Age Limit
  • Course Start: September – 20
  • Course End: October – 30
Learn about…..
  • Basic Media Literacy
  • Fake News & Fact Checking
  • Hate Speech
  • Digital Safety
Online Registration – Apply Here!

CLICK HERE

For More Details:
American Corner –  Jaffna, 23,
Athiyadi Road, Nallur, Jaffna.
Contact Numbers:
021 222 0665 / 076 442 6720

பாடநெறி விபரம் (தமிழில்)

பாட நெறியானது அமெரிக்கன் கார்னர் –  யாழ்ப்பாண கிளையினால் நடத்தப்படுகிறது.
  • கட்டணம்: இலவசம்
  • காலம்: ஐந்து வாரங்கள்
  • வயது: வயதெல்லை இல்லை
  • பாடநெறி ஆரம்பம்: செப்டம்பர் – 20
  • பாடநெறி முடிவு: அக்டோபர் – 30
யார் விண்ணப்பிக்கலாம்?
ஆர்வமுள்ள அனைவரும் இப்பாடநெறிக்கு விண்ணப்பிக்கலாம்.
இப்பாட நெறியில் உள்ளடங்குபவை:
  • அடிப்படை ஊடக அறிவு
  • போலி மற்றும் உண்மையான செய்திகளை பிரித்தறிதல்
  • வெறுக்கத்தக்க பேச்சு
  • டிஜிட்டல் பாதுகாப்பு
இப்பாட நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு, சர்வதேச அங்கீகாரம் கொண்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பாடநெறிக்கு குறைந்த எண்ணிக்கையுடைய மாணவர்களே சேர்த்துக் கொள்ளப்படுவதனால் உங்கள் விண்ணப்பங்களுக்கு முந்திக் கொள்ளுங்கள்.
விண்ணப்பிக்க மேலே CLICK HERE என்பதை கிளிக் செய்யவும்.
மேலதிக விபரங்களுக்கு:
அமெரிக்கன் கார்னர் யாழ்ப்பாணம், 23, அத்தியடி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.
தொலைபேசி இலக்கம்:
021 222 0665 / 076 442 6720

ஊடக கல்வியறிவு ஏன் தேவை?

தற்போது ஊடகங்கள் இல்லாத இடமே இல்லை.  எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஊடகங்களுடன் பின்னிப் பிணைந்திருக்கின்றோம். பல்வேறுபட்ட சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றோம்.
இன்று சமூக ஊடகங்களை பயன்படுத்தி எவ்வளவோ விடயங்கள் உலகில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பல்வேறுபட்ட வர்த்தகங்கள், வியாபாரங்கள் மற்றும் தொடர்பாடல்கள் இந்த ஊடகங்களின் ஊடாகவே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒருவருடைய கருத்துக்களை மற்றோர் தெரிந்து கொள்வதற்கும், அறிந்து கொள்வதற்கும் ஊடகங்கள் மிகப் பெரும் வாயிலாக உள்ளன.
சாதாரணமாக ஒரு அரசினுடைய போக்கு மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால், சமூக ஊடகங்களில் மக்களை ஒன்று திரட்டி எவ்வளவோ பெரிய போராட்டங்களைக் கூட மக்கள் இன்று சாதித்துக் காட்டுகிறார்கள். ஊடகங்கள் ஒரு நாட்டினுடைய பொருளாதாரம், அரசியல், நிர்வாக நிலையை மாற்றி விடும் சக்தியைக் கொண்டன.
ஆகவே ஒரு ஊடகத்தை எவ்வாறு கையாள்வது, அதில் வருகின்ற செய்திகளை எந்தக் கோணத்தில் பார்ப்பது பற்றி நாம் அறிய வேண்டியது அவசியமாகும்.
இன்று நம்மில் பலர், பதிவிடுகின்ற எல்லாப் பதிவுகளையும் நம்பிக் கொண்டு விரைவாக சமூக ஊடகங்களில் பகிர்ந்து விடுவதை அவதானிக்கின்றோம். அதனுடைய உண்மைத் தன்மையைக் கூட பலர் ஆராய்வது இல்லை. இவை பல எதிர்மறையான விளைவுகளை எமது வாழ்க்கையிலும், மற்றவர் வாழ்க்கையிலும் ஏற்படுத்தி விடுகின்றன.
அண்மைக் காலங்களில் நம் நாட்டில் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பரப்பப்பட்ட சில பொய்யான செய்திகள் மற்றும் வதந்திகள் காரணமாக எவ்வளவோ பாரதூரமான விடயங்கள் ஏற்பட்டிருந்தன. சில போலிச் செய்திகள் மற்றும் வதந்திகளினால் நாட்டில் இனக் கலவரங்கள், மதக்கலவரங்கள் கூட தோற்றுவிக்கப்பட்டன.
தற்போது அவற்றைத் தடுப்பதற்கு அரசாங்கமும் பல்வேறு சட்டங்களை கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே நாமும் ஊடகங்கள் பற்றி அறிய வேண்டிய அவசியம் இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.
எனவே, ஊடங்களில் மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிடப்படுகின்ற தகவல்களை போலி மற்றும் உண்மை என்று எவ்வாறு பிரித்து அறிவது, வெறுக்கத்தக்க பேச்சு என்றால் என்ன, டிஜிட்டல் பாதுகாப்புகளை எவ்வாறு மேற்கொள்வது உட்பட பல்வேறு விடயங்களை நீங்கள் இப்பாடநெறியை கற்றுக் கொள்வதன் ஊடாக புரிந்து கொள்ள முடியும்.
ஆகவே ஊடக மற்றும் சமூக ஊடகங்களை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம், எவ்வாறு நோக்குகின்றோம் என்பதில் தான் எமது வெற்றியே உள்ளது. நல்ல விடயங்களுக்கு நாம் அதனை பயன்படுத்தினால், நல்ல பல விளைவுகளைக் கண்டு கொள்ளலாம். தீய விடயங்களுக்கு பயன்படுத்தினால், பாரதூரமான விளைவுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *