Web Development – Free Course

WEB DEVELOPMENT for Beginners

 

Polish 20220903 080346620

 

நீங்கள் க.பொ.த சாதாரண தரம் முடித்தவரும், தொழில்நுட்பத் துறையில் ஈடுபாடுடையவராகவுமாக இருந்தால் இந்தப் பொன்னான வாய்ப்பு உங்களுக்கானது தான்!

 

யார் விண்ணப்பிக்கலாம்?

2021 க.பொ.த. சாதாரண தர (GCE.O/L) பரீட்சைக்குத் தோற்றியோர்.

கற்கைநெறிக் காலம்: 16 நாட்கள்

மொழி: தமிழ்

கட்டணம்: இலவசம் (100% புலமைப்பரிசில்)

 

இக்கற்கைநெறியில் உள்ளடங்குபவை:

  • Web Development
  • Web Designing
  • Web Programming

 

விண்ணப்ப முடிவுத்திகதி: செப்டம்பர் – 03

கற்கைநெறி ஆரம்பம்: செப்டம்பர் – 05

(திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மாத்திரம் நடைபெறும்)

நடைபெறும் இடம்:

Uki Coding School – Jaffna Center 1, 124, ராசாவின் தோட்டம் வீதி, யாழ்ப்பாணம்.

கற்கைநெறியைத் தொடர்வதற்கு உங்களிடம் மடிக்கணினி ( Laptop/Tap ) இருப்பது அவசியமாகும்.

 

விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

(Online Registration)

CLICK HERE

 

மேலதிக தகவல்களுக்கு:  0775694587

 

 

 

 

இணையத்தளம் பற்றிய சில தகவல்கள்

இணையத்தளங்கள் என்பன பெரும்பாலும் இன்றைய நவீன உலகில் தவிர்க்கப்பட முடியாதவையாகி விட்டன. இவை நமது தகவல்களை மின்னணு வடிவில் சேமித்துக் கொள்கின்றன. இதில் வர்த்தகம், கல்வி, விஞ்ஞானம், இலக்கியம், விளையாட்டு என ஒவ்வொரு துறையையும் உள்ளடக்கிய தனித்தனியான பக்கங்கள் தற்போது காணப்படுகின்றன.

இங்கு நாங்கள் இணையத்தளம் என்றால் என்ன, இணைய வடிவமைப்பு, இதனுடைய நன்மைகள் போன்ற சில விடயங்களை உற்று நோக்கப் போகின்றோம். நீங்கள் இணையத்தளம் தொடர்பாக மிகவும் ஆர்வமானவராக இருந்தால், இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து வாசியுங்கள்.

தற்போதைய நவீன உலகில் இணையத்தளங்களை யார் வேண்டுமானாலும் இலகுவாக உருவாக்கி விட முடியும். இதற்கான செலவும் மிக மிகக் குறைவாகும். அதே நேரம் தங்களது தேவைக்கேற்ப இணையத்தளங்களை உருவாக்கிக் கொள்ளவும் முடியும்.

இணையத்தளங்களை உருவாக்குபவர்கள் இணைய வலைப்பக்கங்கள், வலை வடிவமைப்பு, வலை நிரலாக்கம் மற்றும் தரவுத்தள மேலாண்மை போன்ற விடயங்களை அதில் செய்வார்கள்.

வலைத்தள மேம்பாடு என்பது இணையப் பயன்பாடுகளை உருவாக்குதல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய செயல்பாடுகளைக் குறிக்கின்றது.

வெப் டெவலப்பர்கள் (Web Developers) பல்வேறு நிரலாக்க மொழிகளைப் பயன்படுத்தி குறியீட்டு வரிகளை எழுதுவதன் ஊடாக இதனைச் செய்கின்றார்கள். இது அவர்கள் செய்யும் துறைகள், செயல்படும் தளங்களைப் பொறுத்து மாறுபடுகிறது.

HTML, CSS, JAVASCRIPT எனப்படும் நிரலாக்க மொழிகள் இணைய மேம்பாட்டில் உள்ள அடிப்படை விடயங்களாகும்.  அத்துடன் இதில் நீங்கள் WordPress போன்ற பல விடயங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.

இணையத்தளங்களில் உள்ள விடயங்களை உலகில் எந்த மூலையில் உள்ளவரும், படித்துத் தெரிந்து கொள்ளலாம். இன்று அதிகமானோர் புத்தகங்கள், பத்திரிகைகளை வாசிக்க இணையப் பக்கங்களுக்கே செல்கின்றனர். அத்துடன் இணையத்தளம் மூலமாக எமது பொருட்களை, எமது சேவைகளை நாங்கள் சந்தைப்படுத்த முடியும். வியாபார மற்றும் தொழில் துறைகளில் இது மிகவும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது. இதன் மூலமாக அதிக வருமானம் பெற்றுக்கொள்ளப்படுகின்றது.

படிக்கின்ற மாணவர்கள் பலரும் தகவல்களை இணையத்தளங்கள் மூலமாக தெரிந்து கொள்ள வாய்ப்புக் காணப்படுகின்றது அதேபோல எமக்குத் தேவையான பல்வேறு விடயங்களைக் கூட நாங்கள் இணையத்தளங்களில் தேடி கற்றுக் கொள்ள முடியும்.

நீங்கள் இணையத்தளங்களை உருவாக்குவது பற்றிக் கற்றுக் கொள்வீர்கள் எனில், உங்களால் பல இணையத்தளங்களை உருவாக்கி மற்றவர்களுக்குக் கொடுக்க முடியும். இதன் மூலமாக நீங்கள் அதிக வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன், இணையத் தளங்களைப் பராமரிப்பதன் மூலமும் நாங்கள் அதிக வருமானத்தை சம்பாதித்துக் கொள்கின்ற வழிகள் இன்றைய நவீன உலகத்தில் காணப்படுகின்றன.

நீங்கள் 2021 இல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதி இருப்பதுடன், தொழில்நுட்பத் துறையில் மிகவும் ஆர்வமானவராக இருந்தால் இவ் இணையக் கற்கைநெறிக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.  இதில் 100% புலமைப்பரிசில் வழங்கப்படுகின்றது. அத்துடன் இலவசமாகவே இக்கற்கைநெறி உங்களுக்கு வழங்கப்படுகின்றது.

இக்கற்கைநெறியில் உங்களுக்கு Web Development, Web Designing, Web Programming போன்ற பல விடயங்கள் கற்றுத் தரப்பட உள்ளன. அத்துடன் வார நாட்களில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மாத்திரமே நடைபெற உள்ளது. இந்த அரிய சந்தர்ப்பத்தைத் தவறவிடாதீர்கள்.

இக்கட்டுரையில் இணையத்தளம்  பற்றிய சில விடயங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இது உங்களுக்கு மிகவும் உதவிகரமான கட்டுரையாக அமைந்திருக்கும் என்று நம்புகின்றோம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *