IT & English Course

IT & ENGLISH COURSE (FREE)

 

IT & English Course
இப்பயிற்சிநெறி யாருக்கு?
இப்பயிற்சி நெறியானது, பொருளாதார வசதி குறைந்த மாணவியர்களுக்காக நடத்தப்படுகின்றது. கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை எழுதியோர் அல்லது பல்கலைக்கழக நுழைவுக்காக எதிர்பார்த்திருக்கும் மாணவியர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம்.

தகவல் தொழில்நுட்பம் (கிராபிக் டிசைனிங்) மற்றும் ஆங்கிலம் கற்க உங்களுக்கு ஆர்வமா? இப்பொழுதே எம்மோடு இணையுங்கள்.

  • கட்டணம்: இலவசம்
  • கற்கைநெறி காலம்: 06 மாதங்கள்
  • நடாத்துவோர்: கிண்ணியா பரக்கத் அகாடமி (Barakath Academy)

வகுப்புகள் கிண்ணியா பரக்கத் அகாடமி (Barakath Academy) இல் இடம்பெறும்.

விண்ணப்பதாரிகள் நேர்முகத் தேர்வின் மூலம் தெரிவு செய்யப்படுவர்.

முதலில் விண்ணப்பிப்போருக்கே சந்தர்ப்பம் வழங்கப்படும்.

இப்பாடநெறிக்காக பொருளாதார வசதி குறைந்த மாணவியர்களே தெரிவு செய்யப்படுவர்.

 

எவ்வாறு விண்ணப்பிப்பது:

வட்ஸ்அப் மூலம் விண்ணப்பிக்கவும்.
(விண்ணப்பம் முடிந்தது)

தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலத்தின் தேவை பற்றிய ஒரு சிறு கட்டுரை

தகவல் தொழில்நுட்பமானது, தற்போது வளர்ந்து வருகின்ற நவீன யுகத்திலே ஒரு புதுமையான துறையாகும். இருபத்தோராம் நூற்றாண்டில் மிகப்பெரும் வளர்ச்சியைத் தகவல் தொழில்நுட்பத்துறை எட்டியுள்ளது. இத்துறையானது, இன்று எல்லாத் துறைகளிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருக்கிறது.

கல்வி, அரசியல் பொருளாதாரம், மருத்துவம், விவசாயம், விஞ்ஞானம், விண்வெளி ஆராய்ச்சிகள் என்று பல விடயங்களிலும் இது முக்கியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. ஆகவே, தகவல் தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள வேண்டியது, இக்காலத்தில் எமது அடிப்படைக் கல்வியில் ஒன்றாக உருவாகியிருக்கிறது எனலாம்.

எடுத்துக்காட்டாக, மாணவர்களை இது ஒரு நவீன தொழில்நுட்பத்திற்கு பழக்கப்படுத்துவதுடன், ஆச்சரியமான, அறிவியல் பூர்வமான கற்றலுக்கும் இது வழி வகுக்கின்றது.

இந்தத் தகவல் தொழில்நுட்பம் மூலம் முழு உலகையும் எமது கைகளுக்குள் கொண்டுவர முடியும். சாதாரணமாக மின்னஞ்சல்களை அனுப்புவதன் மூலம் உலகம் முழுவதும் உள்ளோருடன் எமக்குத் தொடர்பு கொள்ள முடியும். தகவல் தொழில்நுட்பத்தின் புரட்சியினால் இன்று இலகுவாக வேலைகளை நாம் முடிக்கின்றோம். குறைந்த நேரத்தில் பல்வேறு விடயங்களை எங்களால் செய்ய முடிகின்றது. இந்த நவீன உலகத்திலே, ஒவ்வொரு துறையும் இதனால் இலகுபடுத்தப்படுகின்றது என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

இத்துறையில் நாங்கள் Web Development பற்றிக் கற்றுக் கொள்வதன் மூலம் மேலும் எங்களுடைய திறனை நாங்கள் வளர்த்துக் கொள்ள முடியும். எங்களால் Coding எழுத கற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் பல்வேறு இணையப் பக்கங்களை எங்களால் இலகுவாக உருவாக்கிட முடியும். இத்துறையில் நாம் வளர்ந்தால், நிறைய பணம் கூட எங்களால் சம்பாதிக்க முடியும்.

தற்போது வளர்ந்து வரும் இந்த நவீன யுகத்திலே தகவல் தொழில்நுட்பத்தை சரியான முறையில், நாம் பயன்படுத்துவதன் மூலம் அதன் முழுப் பயனையும் எம்மால் அனுபவித்திட முடியும்.

தற்போது உலகம் சந்தித்திருக்கின்ற பொருளாதார நெருக்கடிகள், அரசியல் நெருக்கடிகள், நோய் நிலைமைகளின் போது மாணவர்களுடைய கற்றல் விடயங்கள் அனைத்தும் இத்தகவல் தொடர்பு சாதனங்களின் மூலம் தான் மேற்கொள்ளப்படுகின்றது. ஆகவே, தகவல் தொழில்நுட்பமானது, மாணவர்களின் கல்வியில் மிகப் பெரிய பங்கை வகிக்கிறது எனலாம். அத்துடன் பல சர்வதேச நிறுவனங்களும் வீட்டில் இருந்து வேலை (Work from Home) என்கின்ற எண்ணக் கருவையும் தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் நிறுவியுள்ளது.

அத்துடன் இந்த நவீன உலகத்தில், ஆங்கிலத்தின் தேவையும் மிக முக்கியமான தேவையாகக் காணப்படுகின்றது. மாணவர்கள் தம் உயர்கல்வியை நோக்கி செல்வதற்கும், தொழில் வாய்ப்புகளை பெறுவதற்கும் ஆங்கிலம் என்பது ஒரு முக்கியமான ஒரு மொழியாக இருக்கிறது. இதனைக் கற்றுக் கொள்வதன் மூலமாக எதிர்கால தொழில் வாழ்க்கையை மிகச் சிறந்த முறையில் அமைத்துக் கொள்ள முடியும்.

இத் துறைசார் பற்றிக் கற்பதற்கு எம்மைச் சுற்றிப் பல்வேறு வகையிலான கற்கைநெறிகள் இது தொடர்பில் நடத்தப்பட்டு வந்தாலும், இலகுவான மற்றும் இலவசமான ஒரு கற்கைநெறியை தற்பொழுது கிண்ணியா பரக்கத் அகாடமி உங்களுக்கு வழங்குகின்றது. ஆகவே இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தத் தவறவிடாதீர்கள். இத்துறையில் நீங்கள் கால் பதிப்பதன் மூலம் எதிர்காலத்தில் மிகச் சிறந்த ஒரு தகவல் தொழில்நுட்பவியலாளராக மற்றும் ஆங்கிலத்தில் புலமை வாய்ந்தவராக நீங்கள் திகழ்ந்திட முடியும்.

அத்துடன் இதனை மறக்காமல் அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *