இலங்கை திறந்த பல்கலைக்கழகம் நடாத்தும் இலவசக் கருத்தரங்கு
நீங்கள் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தவரா? அல்லது சித்தியடையாதவரா?
உங்கள் பட்டப்படிப்பை திறந்த பல்கலைக்கழகத்தில் மிகக் குறைந்த செலவில் நீங்கள் மேற்கொள்ள விரும்புபவரா?
உங்களது அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் பதிலளிக்கவிருக்கிறது.
இந்நிகழ்ச்சி ZOOM மூலமாக நடைபெற இருப்பதனால், அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
காலம்: 13.09.2022 (செவ்வாய்)
நேரம்: பிற்பகல் 2.00
Zoom Link:
https://learn.zoom.us/j/69482941250?pwd=a2VGUkZMbmVodHRlSWN6bjRKVllOZz09
Session ID: 69482941250
Contact number: 0632222052
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் உயர் கல்வி வாய்ப்புகள்
கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைகளில் சித்தியடையாத அல்லது சித்தியடைந்தும் பல்கலைக்கழகங்கள் கிடைக்காத பெரும்பாலான மாணவர்கள் தங்களது உயர் கல்விப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகின்றார்கள். இத்தகைய மாணவர்கள் தமது எதிர்கால வாழ்வை நினைத்து சற்று கவலைப்படுகின்றனர்.
மாணவர்கள் முதலில் அரச பல்கலைக்கழகங்கள் மட்டுமே உயர் கல்விக்கான நிறுவனம் அல்ல என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும். இதையும் தாண்டி, இலங்கையில் உயர்கல்விக்கான நிறுவனங்களும் வாய்ப்புகளும் அதிக அளவில் உள்ளன. இத்தகைய நிறுவனம் ஒன்றுதான் இலங்கை திறந்த பல்கலைக்கழகமாகும்.
இலங்கை திறந்த பல்கலைக்கழகம், ஏனைய அரச பல்கலைக்கழகங்களைப் போன்று சம சட்ட அந்தஸ்து கொண்ட ஒரு பல்கலைக்கழகமாகும். அத்துடன் இது, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகமாகும்.
மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டு, எதிர்கால போட்டி மிக்க உலகில் கால் பதிப்பதற்கான ஒரு தளத்தை இலங்கை திறந்த பல்கலைக்கழகம் உங்களுக்கு வழங்குகின்றது. இங்கு வழங்கப்படுகின்ற இளமாணிப் பட்டங்கள் உள்வாரி பட்டங்களாகவே கருதப்படும்.
இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் உள்வாரியாக பட்டப்படிப்புகளை மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு, இலங்கை திறந்த பல்கலைக்கழகம் பல்வேறுபட்ட உள்வாரியான பட்டப்படிப்பு கற்கை நெறிகளை வழங்குகின்றது.
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கும் அல்லது சித்தியடையாது போனவர்களுக்கும் உயர் கல்வியைத் துவங்க இங்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.
கல்வி, கலை, முகாமைத்துவம், சட்டம், விஞ்ஞானம், பொறியியல் என பல்வேறுபட்ட துறைகளில் உள்வாரி பட்டப்படிப்புகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் இங்கு காணப்படுகின்றன.
உயர் தரப் பரீட்சையில் மூன்று பாடங்களில் சித்தி பெற்றவர்கள் நேரடியாக இளமாணி கற்கை நெறிகளை ஆரம்பிக்க முடியும். சித்தியடையாதவர்கள் திறந்த பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் அத்திவாரக் கற்கை நெறிகளை (Foundation Course) பூர்த்தி செய்த பின்னர், அவர்களுடைய இளமாணிப் பட்டப் படிப்புகளை ஆரம்பிக்கலாம்.
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் பொறியியல் பட்டமானது, INSTITUTE OF ENGINEERS SRI LANKA இனால் அங்கீகரிக்கப்பட்டதாகும். மாணவர்கள் மட்டுமல்ல, இங்கு பல்வேறு தொழில்களைப் புரிந்து வருபவர்களும் பல்வேறு பட்டப்படிப்புகளை பூர்த்தி செய்து இருக்கிறார்கள்.
மேலே உள்ள தகவல்கள், உங்களுக்கு இலங்கை திறந்த பல்கலைக்கழகம் பற்றிய ஒரு அடிப்படை விளக்கத்தை வழங்கியிருக்கும். எனவே மேலும் இது பற்றிய பல்வேறு விடயங்களை அறிந்து கொள்ள, இலங்கை திறந்த பல்கலைக்கழகம் நடாத்தும் இலவச கருத்தரங்கில் கலந்து கொண்டு மேலும் பயனடையுங்கள். இத்தகவலை அதிகமானோருக்கு கொண்டு சேர்ப்பதன் மூலம், அவர்களுடைய கல்விக்கும், எதிர்காலத்திற்கும் மிகச் சிறந்த வழிகாட்டலை வழங்கிடுங்கள்.