ஆடுகள் வளர்க்க ஆசைப்படும் இளைஞர்களுக்கு, சுமார் 70,000 ஆடுகளை இலவசமாக வழங்குவது தொடர்பில், விவசாய அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
அதனடிப்படையில், ஆடுகள் வேலையற்ற இளைஞர்களுக்கும், மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கும் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜமுனாபாரி, போயர், கொட்டுகச்சி உட்பட உயர் ரக ஆடு வர்க்கங்களை வழங்குவதற்குத் தனியார் துறையினரின் பங்களிப்பையும் எதிர்பார்த்துள்ளதாக விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும், ஆடு வளர்க்கப் பொருத்தமான சில மாவட்டங்கள் முதலில் தெரிவு செய்யப்பட்டு, அந்த மாவட்டங்களில் உள்ள இளைஞர்களிடையே இந்தத் திட்டம் முதலில் செயல்படுத்தப்படும்.
இதனடிப்படையில், ஆடுகளை இலவசமாக வழங்கும் இத்திட்டமானது, இவ்வருட இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
🔰 எமது whatsapp குழுவில் இணைந்து கொள்ள… https://chat.whatsapp.com/C1VIkPAcaWSJevmtsM1jSK