English Courses – Open University of Srilanka

உயர் தொழிற்துறை தொடர்பாடலுக்கான ஆங்கில மொழி உயர்தரச் சான்றிதழ்

ஆங்கில மொழி சான்றிதழ்
உங்களுடைய ஆங்கில மொழித்திறன் மற்றும் தொடர்பாடல் திறனை விருத்தி கொள்ள விரும்புகின்றீர்களா?
இதோ உங்களுக்காக இலங்கை திறந்த பல்கலைக்கழகம் வழங்கும் ஆங்கிலப் பாடநெறி!
உயர் தொழிற்துறை தொடர்பாடலுக்கான ஆங்கில மொழி உயர்தரச் சான்றிதழ் 2022/2023
பகுதி – 1
இப்பாடநெறியானது, அடிப்படை ஆங்கில மொழித் திறனை விருத்தி செய்ய நினைப்பவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பகுதி – 2
இப்பாடநெறியானது, தொடர்பாடல் திறனை விருத்தி செய்யும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தங்களது வேலைத்தளங்களில் தொழிலாற்றுவதற்கான ஆங்கில மொழியில் வினைத் திறன்களைப் பெற்றுக் கொள்வர்.
இவ்விரு நிலைகளையும் பூர்த்தி செய்பவர்களுக்கே சான்றிதழ்கள் வழங்கப்படும்.
பாடநெறியானது, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பிராந்திய நிலையங்கள் மற்றும் ஏனைய கற்றல் நிலையங்களில் நடைபெறும்.
இப்பாட நெறிக்கு விண்ணப்பிப்போர் தங்களது விண்ணப்பத்தினை ஆன்லைன் (Online) முறையில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.
விண்ணப்பிப்பதற்கான தகைமைகள்:
  • க.பொ.த சாதாரண தர (GCE.O/L) பரீட்சையில் ஏதாவது ஆறு பாடங்களில் சித்தி அடைந்திருத்தல் வேண்டும்.
  • விண்ணப்பதாரி 18 வயதினைப் பூர்த்தி செய்தவராக இருத்தல் வேண்டும்.
இப்பாடநெறிகளுக்கான பகுதி – 1 மற்றும் பகுதி – 2 அனுமதியானது, 30.10.2020 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஆங்கிலத் தரப்படுத்தல் பரீட்சையின் பெறுபேறுகளைப் பொறுத்தே அமையும்.
அடிப்படை ஆங்கிலப் பாடநெறியில் சித்தி அடைந்தோர் நேரடியாக பகுதி – 2 பாடநெறிக்குத் தம்மைப் பதிவு செய்து கொள்ளலாம். இவர்கள் தரப்படுத்தல் பரிட்சைக்குத் தோற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இவர்கள் விண்ணப்பப் படிவத்தினை மாத்திரம் பூர்த்தி செய்து, விண்ணப்பப் படிவம் சமர்ப்பிக்க வேண்டிய திகதியில் அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப விபரங்கள்
  • விண்ணப்பக் கட்டணம்: 500/-
  • விண்ணப்ப ஆரம்பத் திகதி: 18.09.2022
  • விண்ணப்ப முடிவுத்திகதி: 18.10.2022
  • கால வரையறை: ஒரு வருடம்
பாடநெறிக் கட்டணம்
பகுதி 1 : 16,925/-
பகுதி 2 :  25,925/-
▪️ பாடநெறிக் கட்டணங்களைத் தவணை முறையில் செலுத்த முடியும்.
▪️ விண்ணப்பப் படிவக் கட்டணத்தினை டெபிட் அல்லது கிரெடிட் கார்டு (Debit/Credit) மூலம் இணையத்தின் ஊடாகச் செலுத்தலாம்.
▪️ திறந்த பல்கலைக்கழகத்தின் பிராந்திய நிலையங்களில் அல்லது ஏனைய கற்றல் நிலையங்களில் தங்களது கட்டணத்தை நேரடியாகவும் செலுத்தலாம்.
இப்பாடநெறி தொடர்பான விபரங்கள் அடங்கிய கையேட்டினை பின்வரும் இணைப்பின் ஊடாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

https://ou.ac.lk/advebprocom

மேலதிக விபரங்களுக்கு:
உங்கள் மாவட்டத்தில் அமைந்துள்ள பிராந்திய நிலையங்கள் அல்லது ஏனைய கற்றல் நிலையங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞானங்கள் பீடம்,
இலங்கை திறந்த பல்கலைக்கழகம், நாவல, நுகேகொட.
0112881000 / 0112881430

ஏன் ஆங்கிலம் கற்க வேண்டும்?

இன்று பல்வேறு ஆங்கிலப் பாட நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. ஏனெனில், ஆங்கிலத்தின் தேவை, அந்தளவுக்கு அவசியமாகி விட்டது.
உயர்கல்வி கற்பதற்கும், உயர் பதவிகளைப் பெறுவதற்கும், பல்வேறு நிறுவனங்களில் மற்றும் வெளிநாடுகளில் பணி புரிவதற்கும், பல்வேறு நபர்களுடன் தொடர்பாடுவதற்கும் ஆங்கிலம் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
உலகில் ஆங்கிலம் பேசுவோர் அதிகமானோர் இல்லையெனினும், உலகில் பேசப்படும் இரண்டாவது பொதுவான மொழியாக அது காணப்படுகிறது. அறியாத மொழிகளைக் கொண்ட இருவர் கூட முதலில் ஆங்கிலத்திலேயே உரையாட ஆரம்பிக்கின்றனர். ஏனெனில் ஆங்கிலம் ஒரு சர்வதேச மொழியாகி விட்டது.
ஆகவே நிச்சயம் ஒவ்வொருவரும் தமது ஆங்கில மொழித்திறன் மற்றும் தொடர்பாடல் திறனை விருத்தி செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். ஆங்கில மொழி விருத்தி தொடர்பான பாட நெறிகளை, பல நிறுவனங்கள் நடாத்தி வருகின்றன. அதில் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் நடாத்தும் பல ஆங்கிலப் பாடநெறிகள் காணப்படுகின்றன.
ஆங்கில மொழியில் சான்றிதழ், இளமானி, முதுமானி உட்பட பல்வேறு பாட நெறிகள் அதில் காணப்படுகின்றன. ஆகவே அவற்றுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் போது அவை தொடர்பில், நாம் தொடர்ந்தும் எமது இணையப் பக்கத்தில் வழங்குவோம்.
அத்துடன், ஆங்கில மொழித்திறனை விருத்தி செய்து கொள்வதற்கான பல்வேறு கட்டுரைகளை எமது பக்கத்தில் நீங்கள் காணலாம். அவற்றை வாசிப்பதன் ஊடாக, உங்களது ஆங்கில அறிவைப் பரந்த அளவில் விருத்தி செய்து கொள்வதற்கான ஐடியாக்களைப் பெற முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *