அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம்

33 இலட்சத்துக்கும் அதிகமானோர் தெரிவு!
– ரூ.2,000/-, ரூ.2,500/-, ரூ.5,000/-, ரூ.8,500/-, ரூ.15,000/- கொடுப்பனவு!

“அஸ்வெசும” (ஆறுதல்) நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் ஜூலை 01 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய, இதற்குரிய வர்த்தமானி அறிவித்தல் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.



இதற்கேற்ப
01. இடைநிலை
02. பாதிக்கப்படக்கூடிய
03. வறிய
04. மிகவும் வறுமையான
குடும்பங்களுக்கு என நான்கு பிரிவுகளின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளது.

அதேவேளை
▪️அங்கவீனமானவர்கள்
▪️சிறுநீரக நோயாளிகள்
▪️முதியவர்கள்
ஆகியோருக்கும் இத்திட்டத்தின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.



எனவே அதற்கமைய, முதலாவது பிரிவின் கீழ் தற்காலிக நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துள்ள சுமார் 400,000 பேருக்கு ரூ.2,500/- மாதாந்த கொடுப்பனவு 31.12.2023 வரை வழங்கப்படும்.

இரண்டாவது பிரிவின் கீழ், பாதிக்கப்படக்கூடிய 400,000 பேருக்கான ரூ.5,000/- மாதாந்த கொடுப்பனவு 31.07.2024 வரை வழங்கப்படும்.

மூன்றாவது பிரிவின் கீழ், வறியோர் என அறியப்பட்டவர்களுக்கு, சுமார் 800,000 பேருக்கான ரூ.8,500/- கொடுப்பனவும் 01.07.2023 முதல் மூன்று வருட காலத்திற்கு வழங்கப்படவுள்ளன.

நான்காவது பிரிவின் கீழ் மிகவும் வறுமையானவர்களுக்கான ரூ.15,000/- மாதாந்த கொடுப்பனவும் 01.07.2023 முதல் மூன்று வருட காலத்திற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



▪️72,000 மாற்றுத் திறனாளிகள் மாதாந்தம் ரூ.5,000/- வீதமும்
▪️சிறுநீரக நோயாளிகள் 39,150 பேருக்கு மாதாந்தம் ரூ.5,000- வீதமும்
▪️முதியவர்களுக்கான, சுமார் 416,667 பேருக்கு மாதாந்தம் ரூ.2,000/-
எனும் அடிப்படையிலும் நலன்புரி கொடுப்பனவு வழங்கப்படவுள்ளன.

நலன்புரி நன்மைகள் கொடுப்பனவைப் பெற, 340 பிரதேச செயலாளர் (DS) பிரிவுகளிலிருந்தும் 3,712,096 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கொடுப்பனவுத் திட்டத்திற்கு தகுதியானவர்களைக் கண்டறிவதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் விரைவில் அவை பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp GroupJoin Now
Telegram GroupJoin Now
Facebook PageJoin Now