ENGLISH ENRICHMENT COURSE

ENGLISH ENRICHMENT COURSE

Basic English Course for Beginners!

English free course

 

Are you a basic English speaker? Here is your chance!

  • Fee: Free
  • Duration: 03 Months (20.09.2022 – 20.12.2022)
  • Time: Wednesdays & Fridays (4.00 – 6.00 p.m.)

Classes will be conducted at the American Corner Jaffna.

 

REGISTER HERE!

CLICK HERE

 

For More Details:

American Corner Jaffna, 23, Athiyadi Road, Nallur.

Contact Numbers

0212220665 / 0764426720

 

 

பாடநெறி பற்றிய விபரம் (தமிழில்)

 

அமெரிக்கன் கார்னர் – யாழ்ப்பாணம் நடாத்தும் இலவச ஆங்கில பாடநெறி.

இப்பாடநெறி ஆங்கிலம் கற்க ஆரம்பிக்கும் அனைவருக்கும் பொருத்தமானது.

  • கட்டணம்: இலவசம்
  • காலம்: 03 மாதங்கள் (20.09.2022 – 20.12.2022)
  • நேரம்: புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் (4.00 – 6.00 பி.ப.)

வகுப்புகள் அமெரிக்கன் கார்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும்.

இப்பாடநெறியில் குறைந்த அளவு எண்ணிக்கையான மாணவர்களே தெரிவு செய்யப்படுவதால், விண்ணப்பிக்க முந்திக் கொள்ளுங்கள்.

 

மேலதிக விபரங்களுக்கு:

அமெரிக்கன் கார்னர் –  யாழ்ப்பாணம், 23, அத்தியடி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.

0212220665 / 0764426720

மேலே உள்ள லிங்கினை கிளிக் செய்து உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பியுங்கள்.

 

 

 

ஆங்கிலம் கற்க ஆசைப்படும் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு பதிவு.

 

இன்றைய காலத்தில் ஆங்கிலமானது, ஒரு சர்வதேச மொழியாகவும், நாகரிக மொழியாகவும் மாறிவிட்டது. எமது உயர் கல்வியைத் துவங்கவும், தொழில்களை பெற்றுக் கொள்ளவும், பல இன மக்களுடன் கலந்துரையாடுவதற்கும், வெளிநாடுகளில் சிறந்த வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கும் ஆங்கில மொழி மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டும் என விரும்பும் ஒவ்வொருவரும் ஆங்கிலத்தை கற்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

ஆங்கிலம் பற்றிய பயம் இனி தேவை இல்லை. அடிப்படை ஆங்கில அறிவை நாங்கள் பெற்றுக் கொள்வோமாக இருந்தால், மிகுதி அனைத்தும் தானாக வந்து சேரும். இந்தக் கட்டுரையில் ஆங்கிலம் கற்பது எவ்வாறு என்பது பற்றிய அடிப்படை விடயத்தை உங்களுக்கு தெளிவுபடுத்த முயற்சிக்கின்றோம்.

மற்றவர்கள் ஆங்கிலம் பேசுகின்ற பொழுது, அவர்களை உற்று நோக்குங்கள். அவர்கள் பேசுவதை நன்கு செவிமடுங்கள். அவர்கள் பேசுவது உங்களுக்குப் புரியாமல் கூட இருக்கலாம். இருப்பினும் பரவாயில்லை. அவற்றினை நன்கு செவிமடுங்கள். அவர்கள் எந்தெந்த வார்த்தைகளை, எந்தெந்த உணர்வுகளுடன் பயன்படுத்துகிறார்கள் என்பதை கூர்ந்து நோக்கினால், நாளடைவில் அவை உங்களுடன் வெகு இலகுவாக வந்து சேரும்.

இந்த உலகத்தில் நாம் பிறக்கையில் எந்த மொழியையும் கற்றுக் கொண்டு வரவில்லை. நம் தாய், தந்தை, குடும்பம், சுற்றியுள்ளோர் என்ன பேசுகின்றார்கள் என்பது கூட அப்பருவத்தில் எமக்குத் தெரியாது. ஆனால், அப்பருவத்தில் நாம் அவற்றை அனைத்தையும் கூர்ந்து கவனித்து இருப்போம். அதன் பின்னர் ஒரு ஒரு எழுத்தாக, ஒவ்வொரு சொல்லாக அவற்றைப் பயன்படுத்தினோம். அவ்வாறுதான் நாம் எமது தாய் மொழியைக் கூட கற்றுக் கொண்டோம்.

அடிப்படையில் ஆங்கிலம் கற்பவர்கள் ஆங்கிலத்தில் உள்ள சில சொற்களை மனனம் ஆக்கிக் கொள்ளுதல் வேண்டும். ஆங்கிலம் அந்நிய மொழியாகையால், அதன் கருத்துக்களுடன் மனனம் செய்வது சிறந்தது. எந்த அளவுக்கு சொற்களை நாங்கள் தெரிந்து வைத்திருக்கின்றோமோ, அந்த அளவுக்கு ஆங்கிலம் பேச எமது நாவு துடிக்கும். எமது மொழியைப் போலவே ஆங்கிலத்திலும் ஒரு சொல்லுக்கு பல கருத்துக்கள் இருக்கின்றன. பல கருத்துக்களை கொண்ட சில சொற்களும் உள்ளன. அவற்றை எங்கே, எப்படி, எப்போது பயன்படுத்துவது என்பதைக் கற்றுக் கொள்வதே இலக்கணமாகும்.

ஆங்கில மொழிச் சொற்களுக்கு சரியான கருத்து தெரிந்தால்தான், எம்மால் அவற்றைக் கொண்டு வாக்கியங்கள் அமைத்து பேச, எழுத, உரையாட முடியும். அன்றாடம் நாங்கள் கற்கின்ற பொழுது ஆங்கில வார்த்தைகளை ஏனையவருடன் பேசும்போது பயன்படுத்த வேண்டும். கற்கின்ற சொற்களை நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தத் தவறினால், அவை மறந்து போக அதிக சந்தர்ப்பங்கள் உண்டு. ஆகவே, தொடர்ந்து அவற்றை செயல்முறைக்கு கொண்டு வர முயற்சியுங்கள்.

இன்று நிறைய அடிப்படை ஆங்கில புத்தகங்கள் காணப்படுகின்றன. அவற்றைக் கற்பதனூடாக, அடிப்படை இலக்கணங்களை எம்மால் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். அதேபோல நிறைய ஆங்கில பாட நெறிகளும் இதற்கென நடத்தப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் அமெரிக்கன் கார்னர் யாழ்ப்பாணம் நடாத்தும் இப்பாடநெறி. இதனை நீங்கள் கற்றுக் கொள்வதன் ஊடாக, ஆங்கிலத்தை வெகு இலகுவாக மற்றும் விரைவாக கற்றுக் கொள்ள இது வழிகாட்டுகின்றது.

ஆங்கிலத்தில் சிறுவர் கதைப் புத்தகங்கள் வெளி வருகின்றன. அவற்றை வாசிப்பதன் ஊடாக மேலும் நமது ஆங்கில அறிவை விருத்தி செய்து கொள்ளலாம். வார இதழ் ஆங்கில பத்திரிகைகளில், சிறிய ஆங்கிலக் கட்டுரைகளும் வெளி வருகின்றன. அவற்றையும் தவறாது படித்து வாருங்கள்.

ஆகவே, அந்நிய மொழிகளை கற்றுக் கொள்வதும் இவ்வாறுதான். ஆங்கிலத்தைக் கற்பதற்கான மேலும் சில உத்திகளை இங்கு வழங்குகின்றோம். பல ஆங்கிலத் திரைப்படங்கள், நாடகங்கள் இன்று வெளிவருகின்றன. அவற்றில் பல எமது தாய் மொழியில், மொழிபெயர்ப்புகளுடன் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை பார்ப்பதன் ஊடாக மேலும் எமது ஆங்கில அறிவை விருத்தி செய்து கொள்ளலாம்.

அடுத்து, ஆங்கிலச் செய்திகளை அதிகம் கேளுங்கள். இரவு நேரங்களில் தொலைக்காட்சிகளில் தமிழில் செய்தியை வாசி விட்டு, பின்னர் அதனை ஆங்கிலத்திலும் வாசிக்கும் தொலைக்காட்சி சேனல்கள் உள்ளன. அவற்றைத் தவறாமல் பார்ப்பதன் ஊடாக என்னென்ன விடயங்கள் அவர்கள் சொல்கின்றார்கள் என்பதை இலகுவாக நீங்கள் கற்றுக் கொள்ளலாம்.

நீங்கள் விரைவாக ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டுமாக இருந்தால், ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரத்தை அதற்கென ஒதுக்கி வையுங்கள். ஏதாவது ஒரு ஆங்கிலப் பந்தியை எடுத்து அதனை நான்கு ஐந்து முறை உரத்து வாசியுங்கள். அதன்பின்னர், அதனை ஒரு தாளில் எழுதுங்கள். மற்றவர்களும் அதனை வாசிக்கச் சொல்லி அதனை நீங்களும் கேளுங்கள். இதுவும் ஆங்கிலத்தை கற்பதற்கான ஒரு வழியாகும்.

நீங்கள் கற்றுக் கொண்ட சிறு சொற்களை, சிறு வசனங்களை, தகவல்களை உங்கள் வீட்டில் உள்ள சிறு பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுங்கள். முதலில் கற்று, நாம் அவற்றை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுப்பதனால் எமது திறன் மேலும் விருத்தியடையும்.

உங்கள் தன்னம்பிக்கையை நீங்கள் வளர்ப்பதன் ஊடாகவே விரைவாக ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்ளலாம். ஆங்கிலம் கற்பதன் ஊடாக, இப் பரந்த உலகிலே ஏராளமான வாய்ப்புகளை நீங்கள் பெறுவீர்கள். ஆகவே, ஆங்கிலத்தைக் கற்று உங்கள் எதிர்காலத்தை வளமாக்கிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *