World Eggs Day

இன்று உலக முட்டை தினம்!

Egg

 

உலக முட்டை தினமானது, 1996 முதல் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதத்தின், இரண்டாவது வெள்ளிக்கிழமை உலக முட்டை தினமாக சர்வதேச முட்டை ஆணையத்தால் (International Egg Commission) நிறுவப்பட்டது. அந்த வகையில் இன்று ஒக்டோபர் 14 ஆம் திகதி உலக முட்டை தினமாகும்.

2022 உலக முட்டை தினத்திற்கான தொனிப்பொருள்: ‘சிறந்த வாழ்க்கைக்காக முட்டைகள்’ (Eggs for a Better Life)
Egg
இத்தினமானது, முட்டைகளின் முக்கியத்துவம் மற்றும் உலக மக்களுக்கு உணவளிப்பதில் முட்டைகளின் போஷாக்கு பற்றிய விழிப்புணர்வையும் உருவாக்குகிறது.
சாதாரணமாக ஒரு முட்டையானது 6 கிராம் புரதத்தையும், 13 அத்தியாவசிய விற்றமின்கள் மற்றும் தாதுக்களையும் கொண்டுள்ளது.
Egg
முட்டைகள் புரதச்சத்து, கொழுப்புச்சத்து கொண்டவை மற்றும் அனைவரினாலும் பரவலாக உட்கொள்ளப்படும் ஓர் உணவாகும். அத்துடன் முட்டைகள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லவை என்று விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் முட்டைகள், நல்ல கொழுப்பின் இருப்பை அதிகரிக்கும் அதே வேளை, கெட்ட கொழுப்பைக் குறைக்கின்றன.
தற்போது இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக முட்டைகளுடைய விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளமையால், பலரும் முட்டைகளை நுகர்வதில் தயக்கம் காட்டுகின்றனர். ஆகவே தமது வீடுகளில் கோழிகளை வளர்ப்பதன் மூலம், நாம் இலகுவாக முட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம். அதற்குக் குறைந்த இடப்பரப்பும், குறைந்தளவான தீவனமுமே தேவை.
ஆகவே இப்போதே கோழி வளர்க்க ஆரம்பிப்போம். தினமும் முட்டைகளை உண்டு ஆரோக்கியமாக இருப்போம்.
WHATSAPP GROUP: CLICK HERE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *