Wildlife Guard (Open Exam) Job Vacancies 2025 – Department of Wildlife Conservation

Wildlife Guard (Open Exam) Job Vacancies 2025 – Department of Wildlife Conservation


வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் வனவிலங்கு பாதுகாவலர் பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2025

இலங்கை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் வனவிலங்கு பாதுகாவலர் பதவிக்கான 257 வெற்றிடங்களை நிரப்புவதற்காக திறந்த போட்டிப் பரீட்சை நடத்தப்பட உள்ளதாக அரச வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பரீட்சை 2026 மார்ச் மாதத்தில் நடைபெறும். மொத்த வெற்றிடங்களில் 3% பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


பதவி விபரம்

  • பதவி: வனவிலங்கு பாதுகாவலர் (Wildlife Guard) – III தரம்

  • துறை: இலங்கை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்

  • சேவை: நிரந்தர அரசு சேவை (ஓய்வூதியத்துடன்)

  • பணியிடம்: இலங்கையின் எந்த பகுதியிலும்


சம்பளம் & பயிற்சி

  • 6 மாத பயிற்சி காலம் வழங்கப்படும்

  • பயிற்சி காலத்தில்: ரூ.18,500/- மாத உதவித்தொகை

  • நிரந்தர நியமனத்திற்கு பின் (01.01.2027 முதல்):
    ரூ.45,230 – 78,360 (MN 1 – 2025 ஊதிய அளவுகோல்)

  • நியமனம் பெற்றவர்கள் 3 வருட பரீட்சார்த்த காலத்திற்கு உட்படுவர்


வயது வரம்பு

  • 05.01.2026 அன்று

    • 18 வயதுக்கு குறையாமல்

    • 30 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும்

  • (05.01.1996 முதல் 05.01.2008 வரை பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்)


கல்வித் தகுதி

  1. G.C.E. O/L

    • ஒரே அமர்வில்

    • மொழி (சிங்களம் / தமிழ் / ஆங்கிலம்),

    • கணிதம் மற்றும் விஞ்ஞானம் உட்பட

    • 6 பாடங்களில் தேர்ச்சி

  2. G.C.E. A/L

    • குறைந்தது 1 பாடத்தில் தேர்ச்சி (General Test தவிர)

  3. தொழில்முறை அல்லது சுற்றுச்சூழல் தொடர்பான கூடுதல் தகுதிகள் இருந்தால் மேலதிக முன்னுரிமை வழங்கப்படும்


உடற்தகுதி

  • ஆண்கள்: குறைந்தது 5 அடி 4 அங்குலம்

  • பெண்கள்: குறைந்தது 5 அடி 2 அங்குலம்

  • நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியம் அவசியம்


தேர்வு முறை

  1. எழுத்துப் பரீட்சை 

    • பாடம்: நுண்ணறிவு  / உளச்சார்பு (Aptitude / Intelligence Test)

    • புள்ளிகள்: 100

    • தேர்ச்சி: 40%

    • மொழி: தமிழ் / சிங்களம் / ஆங்கிலம்

  2. கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை(100 புள்ளிகள்)

    • கல்வி மற்றும் தொழில்முறை தகுதிகள்

    • Scout / Cadet / Environmental Corps அனுபவம்

    • விளையாட்டு திறன்கள்

    • தனிப்பட்ட திறன்கள்


விண்ணப்பிக்கும் முறை

  • Online விண்ணப்பம் மட்டும்

  • இணையதளம்: www.doenets.lk

  • விண்ணப்ப தொடக்கம்: 08.12.2025 – காலை 9.00

  • விண்ணப்ப கடைசி நாள்: 05.01.2026 – இரவு 9.00

  • தேர்வு கட்டணம்: ரூ.600/-

விண்ணப்பம் முழுமையாக நிரப்பப்படாத பட்சத்தில் எந்த அறிவிப்பும் இன்றி நிராகரிக்கப்படும்.


முக்கிய குறிப்பு

  • தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இலங்கையின் எந்த பகுதியில் பணியாற்றவும் தயாராக இருக்க வேண்டும்

  • அனைத்து சான்றிதழ்களும் நேர்முகத் தேர்வு நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்

  • தவறான தகவல்கள் வழங்கப்பட்டால் எந்த நிலையிலும் விண்ணப்பம் ரத்து செய்யப்படும்

 

இன்னும் தமிழ் வர்த்தமானி வெளியாகவில்லை. வெளியானதும் இப்பக்கத்தில் பதிவிடப்படும்.

Wildlife Guard, Wildlife Ranger பரீட்சை வட்ஸ்அப் குழுClick here

Download pdfClick here