நீர்க்கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல், இலங்கையில் நீர் கட்டணமானது, 50 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாடசாலைகள் வைத்தியசாலைகள், மத ஆலயங்கள், சமுர்த்தி மற்றும் அஸ்வெசும பயனாளிகள், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நீர்க்கட்டண அதிகரிப்பு தாக்கம் செலுத்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நாட்டில் மின்சாரக் கட்டணம் 66% ஆல் அதிகரிக்கப்பட்டமையே, நீர்க்கட்டண அதிகரிப்பிற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 0 முதல் 5 வரையான அலகொன்று 60/- ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், மாதாந்த கட்டணமாக 300/- அறிவிடப்படவுள்ளது.
அத்துடன், 06 முதல் 10 வரையான அலகொன்று 80/- ரூபாவினால் அதிகரிக்கட்டுள்ளதுடன், மாதாந்த கட்டணமாக 300/- ரூபா அறிவிடப்படவுள்ளது.
மேலதிக விபரங்களை கீழுள்ள வர்த்தமானியில் காணலாம்.