Vocational Training for Students

இந்த ஆண்டு GCE.A/L பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் ஆங்கில மொழி மற்றும் தொழில்சார் பாடமொன்றை இலவசமாகக் கற்பதற்கு அடுத்த மாதம் 05 ஆம் திகதி முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில், நாடளாவிய ரீதியில், 300 நிலையங்கள் இதற்கெனப் பயன்படுத்தப்படவுள்ளன.

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர், தோற்றிய மாணவர்களுக்கும் அதே போன்ற பயிற்சித் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.