அமெரிக்க கிரீன் கார்ட் விசாவுக்கு விண்ணப்பிக்க முன்னர் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்
அமெரிக்க லொத்தர் விசாவுக்கான விண்ணப்பங்களை இணையத் தளத்தினூடாக, இலங்கை நேரப்படி ஒக்டோபர் 02 ஆம் திகதி முதல் நவம்பர் 07 ஆந் திகதி வரை சமர்ப்பிக்க முடியும்.
கிறீன் கார்ட் திட்டம் மூலம் குறைந்த குடியேற்ற விகிதங்களைக் கொண்ட நாடுகளிலிருந்து 55,000 நபர்களுக்கு ஆண்டுதோறும் அமெரிக்காவில் வசிக்க விசா வழங்கப்படுகிறது.
இத்திட்டத்திற்கான விண்ணப்பதாரர்கள் கணினியால் உருவாக்கப்பட்ட எழுமாறான லாட்டரி வரைதல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். விண்ணப்பதாரர் தெரிவு செய்யப்பட்டுள்ளாரா என்பது பற்றி DOS ஆன்லைனில் பிரத்தியேகமாக அறிவிக்கப்படும்.
விண்ணப்பதாரர்களில் யார் யார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதை www.dvlottery.state.gov என்ற இணையதளத்தில், மே 2025 முதல் பார்வையிடலாம்.
கிரீன் கார்டு லாட்டரி திட்டத்தில் பங்கேற்க தகுதியற்ற நாடுகள்
DV-2026 கிரீன் கார்டு திட்டத்திற்காக, கீழ்வரும் சில நாடுகளின் பூர்வீகவாசிகள் விண்ணப்பிக்கத் தகுதியற்றறோர் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. அந்நாடுகள் வருமாறு…
01. பங்களாதேஷ்
02. பிரேசில்
03. கனடா
04. இந்தியா
05. சீனா (ஹாங்காங் உட்பட)
06. பாகிஸ்தான்
07. கொலம்பியா
08. டொமினிக்கன் குடியரசு
09. வெனிசுலா
10. எல் சல்வடோர்
11. ஹைட்டி
12. ஹோண்டுராஸ்
13. ஜமைக்கா
14. மெக்சிகோ
15. நைஜீரியா
16. பிலிப்பைன்ஸ்
17. தென் கொரியா
18. வியட்நாம்
ஆனால், இலங்கையைச் சேர்ந்தவர்கள் கிரீன் கார்டு லாட்டரிக்காக விண்ணப்பிக்க முடியும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
விண்ணப்பித்தல் முற்றிலும் இலவசம்
Green Card விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் அறவிடப்படுவதில்லை. விண்ணப்பித்தல் முற்றிலும் இலவசமானது. இதனை வைத்து சிலர் உங்களிடம் பணம் கேட்கலாம். அவர்களிடம் சற்று கவனமாக இருந்து கொள்ளுங்கள். விண்ணப்பிப்பதற்கு அமெரிக்க அரசுக்கோ அல்லது எவருக்குமோ நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
ஒன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்
DV-2026 கிரீன் கார்டு லாட்டரி திட்டத்திற்கு, ஒக்டோபர் 02, 2024 முதல் நவம்பர் 05, 2024 வரை விண்ணப்பங்களை மின்னணு (Online) முறையில் மட்டும் சமர்ப்பிக்க முடியும்.
இதற்காக கடிதம் மூலமான எவ்வித விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
ஒரு நபர் ஒரு விண்ணப்பத்தினை மாத்திரமே அனுப்ப முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பினால், கிறீன் கார்ட் லாட்டரி திட்டத்திலிருந்து முழுவதுமாக அவர் நீக்கப்படுவார். ஆகவே, விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கும் போது மிகக் கவனமாக சமர்ப்பியுங்கள்.
DV – 2026 கிரீன் கார்டு லாட்டரி திட்டத்திற்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான நடைமுறைகள் பின்வருமாறு:
இந்த ஆன்லைன் மூலமான நுழைவு படிவத்தில் தரப்பட்ட அனைத்தையும் சரியாக நிரப்புங்கள்.
◾முழுப்பெயர் (உங்கள் பாஸ்போர்ட் / NIC இல் உள்ள படி)
◾பிறந்த திகதி
◾பாலினம்
◾நகரம் மற்றும் பிறந்த நாடு
◾தகுதி / கட்டணம் செலுத்தும் நாடு
◾விவரக்குறிப்புகளின் படி அமைந்த புகைப்படம்
◾மின்னஞ்சல் முகவரி
◾தற்போது நீங்கள் வாழும் நாடு
◾தொலைபேசி இலக்கம் (விரும்பினால்)
◾மின்னஞ்சல் முகவரி
◾உங்கள் கல்வி நிலை
◾திருமண நிலை
◾திருமணமாகாத மற்றும் 21 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் தகவல்கள்
◾மனைவியின் பெயர் மற்றும் தகவல்கள் (முன்பு விவரிக்கப்பட்ட விவரக்குறிப்புகளுடன் அமைதல் வேண்டும்)
புகைப்படம்
பதிவேற்ற வேண்டிய டிஜிட்டல் படங்கள் பின்வரும் விவரக்குறிப்புகளுக்கு இணங்க அமைதல் வேண்டும்.
01. படம் (JPEG) வடிவத்தில் இருக்க வேண்டும்.
02. படம் நிறத்தில் இருக்க வேண்டும். (24 bits per Pixel)
குறிப்பு: கறுப்பு மற்றும் வெள்ளை / 8-பிட் படங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
03. ஏற்றுக்கொள்ளப்படும் அதிகபட்ச பட்ச அளவு 240 கிலோ பைட்டுகள் (240KB Size Photo)
04. ஏற்றுக்கொள்ளப்படும் குறைந்தபட்ச பரிமாணங்கள் – 600 பிக்சல்கள் (அகலம்) மற்றும் 600 பிக்சல்கள்.
உயரம், அகலத்திற்குச் சமமானதாக இருக்க வேண்டும்.
05. ஸ்கேனர் தெளிவுத்திறன் ஒரு அங்குலத்திற்குக் குறைந்தது 300 புள்ளிகளாக இருக்க வேண்டியது அவசியம் (dpi)
06. புகைப்படத்தில் நபரின் தலை நேராக இருக்க வேண்டும். கீழே அல்லது பக்கவாட்டில் சாய்ந்து இருக்கக் கூடாது.
07. நடுநிலை, வெளிர் நிற பின்னணியில் இருட்டாக உள்ள புகைப்படங்கள் அல்லது வடிவமைக்கப்பட்ட புகைப்படங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
08. முகம் இல்லாத புகைப்படம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
09. சன்கிளாஸ் (Sunglass) அணிந்திருக்கும் புகைப்படங்கள் அல்லது முகத்தைக் கெடுக்கும் சாதனங்கள் கொண்ட புகைப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
10. தலையில் தொப்பி அல்லது உறை அணிந்திருக்கும் புகைப்படங்கள் மட்டும் மத நம்பிக்கை காரணமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பதாரரின் முகத்தில் வேறு எந்தப் பகுதியையும் மறைக்கக் கூடாது.
அனைத்திலும் மிக முக்கியமாக, அமெரிக்க அரசின் இணையப் பக்கத்தில் கூறப்பட்டுள்ள விதிகளுக்கு அமைவாக புகைப்படம் இருத்தல் வேண்டும்.
புகைப்படங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கான உதாரணங்கள்
கல்வி அல்லது பணி அனுபவம் அவசியம்
“கிரீன் கார்டு”க்கு தகுதி பெற, ஒவ்வொரு விண்ணப்பதாரரும் குறைந்தபட்சம் உயர்தரக்கல்வி (A/L) அல்லது அதற்கு சமமான கல்வி அல்லது கடந்த ஐந்து வருடங்களுக்குள் குறைந்தபட்சம் ஒரு தொழிலில் இரு வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். கல்வி, பணி அனுபவ சான்றுகளை விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.
எப்படி விண்ணப்பிப்பது
விண்ணப்பம் முற்றிலும் இலவசம். விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க கட்டணம் ஏதுமில்லை. விண்ணப்பமானது, அமெரிக்க அரசின் இணையத்தளம் வழியாக ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தாமதமான, முழுமையற்ற / தாளிலான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
கணவன், மனைவி இருவரும் தனித் தனியாக விண்ணப்பிக்க முடியும். ஒருவர் தெரிவு செய்யப்பட்டால் மற்றவரும் தகுதி பெறுவார்.
விண்ணப்பிக்கும் போது கவனத்திற் கொள்ள வேண்டியவை
நீங்கள் Online மூலம் விண்ணப்பிக்க 60 நிமிடங்கள் மாத்திரமே உங்களுக்கு வழங்கப்படும். 60 நிமிடங்களில் விண்ணப்பத்தை உங்களால் சமர்ப்பிக்க முடியவில்லை எனில், விண்ணப்பம் Refresh ஆகும். மீண்டும் புதிதாக விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும். ஒருவர் ஒருபோதும் இரண்டு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கக் கூடாது. அவ்வாறு இரண்டு விண்ணப்பங்கள் சமர்ப்பித்தால், உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். எனவே மிகவும் நிதானமாகவும், கவனமாகவும் விண்ணப்பியுங்கள்.
கிரீன் கார்ட் மோசடிகளைத் தவிர்த்தல்
துரதிர்ஷ்டவசமாக, DV கிரீன் கார்ட் திட்டம் சில சமயங்களில் மோசடி செய்பவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. எனவே சற்று கவனமாக இருக்கவும். விசா வெற்றியாளர்கள் அஞ்சல் மூலமோ அல்லது SmS மூலமாகவோ அறிவிக்கப்பட மாட்டார்கள். உங்களுக்கு கிரீன் கார்ட் கிடைத்து இருக்கிறது, அதற்காக இவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று யாரேனும் பணம் கேட்டால் அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
விண்ணப்பித்தைச் சமர்ப்பித்த பிறகு செய்ய வேண்டியவை
விண்ணப்பித்தைச் சமர்ப்பித்த பிறகு வரும் Confirmation Number Page ஐ பத்திரமாக Screenshot அல்லது Print பண்ணிக் கொள்ளுங்கள்.
தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் May, 2025 முதல் dvprogram.state.gov என்ற இணையத்தளத்தில் உங்கள் Confirmation Number ஐ பயன்படுத்தி, நீங்கள் அமெரிக்க குடியுரிமைக்காக தெரிவு செய்யப்பட்டீர்களா, இல்லையா என்பதைப் பார்க்க முடியும்.
விண்ணப்பிக்கப் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் பாவனையில் உள்ளதாகவும், நிரந்தரமானதாகவும் இருத்தல் வேண்டும். அனைத்து தொடர்பாடல்களும் மின்னஞ்சல் மூலமாகவே நடைபெறும்.
முன்கூட்டியே விண்ணப்பியுங்கள்
Green Card Lottery ஆனது, முற்றிலும் இலவசமாக அமெரிக்க அரசினால் வழங்கப்படும் ஒரு திட்டமாகும். வெளிநாடு செல்ல ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் முயற்சி செய்யுங்கள்.
தயவுசெய்து விண்ணப்பிப்பதற்கு முடிவுத்திகதி வரை காத்திருக்க வேண்டாம். இறுதி நேரத்தில் பலர் விண்ணப்பிப்பதன் காரணமாக, இணையத்தளம் வேலை செய்யாது போகலாம். இதனால், நீங்கள் விண்ணப்பிக்கும் தகுதியை இழக்க நேரிடும். எனவே முன்கூட்டியே விண்ணப்பிப்பது மிகச் சிறந்தது.
குறிப்பு: DV கிரீன் கார்டு லாட்டரி திட்டத்திற்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாது. எந்த ஒரு முகவரிடமும் அல்லது இடைத்தரகரிடம் இதற்கென பணம் கொடுத்து விடாதீர்கள்.
குறிப்பு: ஒருவர் ஒரு விண்ணப்பம் மாத்திரமே சமர்ப்பிக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பித்தால், அவரின் அனைத்து விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.
• விண்ணப்பிப்பதற்கான புகைப்படங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை இந்த இணையப்பக்கத்தில் காணுங்கள்.
• உங்கள் பணி அனுபவத்திற்கான அடிப்படை தேவையை கீழே உள்ள இணையதளத்திற்கு சென்று பாருங்கள்.
• 2026 கிரீன் கார்டு திட்டத்திற்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
• Green Card Lottery Visa – 2025 ஆண்டின் பெறுபேறுகளை அறிந்து கொள்ள கீழுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
US Green Card Lottery Results – 2025
JOIN OUR WHATSAPP GROUP: CLICK HERE