நாளைய தினம் (12) நாடளாவிய ரீதியில், சுகவீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை அமுல்படுத்தவுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் தெரிவிக்கின்றன.
அரச ஊழியர்களின் சம்பளத்திற்கு குறைந்தபட்சம் 20,000/- ரூபாவை வழங்குமாறு கோரியே, இத் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அரச சேவை சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே, அரச சேவை சங்கங்களின் ஒன்றியத்தின் இணைப்பாளர் சந்தன சூரியராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள அடையாள வேலைநிறுத்தம் இன்றும் தொடர்கின்றது குறிப்பிடத்தக்கது.
▪️All Latest Updates: Click here