System Change?

தற்போது நாட்டில் நவீன கல்வி முறையை உருவாக்குவதற்கு நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். 2024 ஆம் ஆண்டுக்கு மாத்திரமன்றி, 2030 ஆம் ஆண்டுக்கும் உகந்த கல்வி முறையை உருவாக்க வேண்டும். அந்தப் பணிகளை இப்போது செய்து வருகிறோம். ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தல், நவீன தொழில்நுட்ப அறிவை வழங்குதல் போன்ற திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஒவ்வொரு பாடசாலையிலும் செயற்கை நுண்ணறிவு (AI) திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். முதலில் பாடசாலைகளில் AI சங்கங்கள் தொடங்கப்பட வேண்டும். மேலும், தேசிய AI மையம் சட்டப்படி நிறுவப்படவுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதன்படி, அடுத்த சில ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவுத் திட்டமானது, ஆரம்பப் பாடசாலைகளில் மட்டுமின்றி, உயர்கல்வி கற்பிக்கப்படும் அனைத்துப் பாடசாலைகளிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

நவீன தொழில்நுட்பத்துடன் நாம் முன்னேற வேண்டியுள்ளது. எனவே, தொழில்நுட்ப அறிவை பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டும். அதற்கேற்ப, பாடசாலைக் கல்வி மற்றும் பரீட்சை முறையை மாற்றியமைப்பது குறித்து நாம் கவனம் செலுத்தியுள்ளோம். இந்த நவீன தொழில்நுட்ப அறிவோடு பிள்ளைகளின் ஆங்கில மொழி அறிவையும் வளர்க்க வேண்டும். அதற்கான திட்டங்களையும் நாம் வகுத்துள்ளோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.