உலகின் பல நாடுகளிலும் அமுல்படுத்தப்படும் STEAM கல்வி முறையானது, கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையிலும் அறிமுகம் செய்யப்பட்டது.
இலங்கையின் மேல் மாகாணத்தை ஆரம்பமாகக் கொண்டு, STEAM கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அறிமுக நிகழ்வானது, கொழும்பு ரோயல் கல்லூரியில் இடம்பெற்றது.
அத்துடன், நாட்டின் ஏனைய மாவட்டங்களுக்கான STEAM கல்வி முறையானது, ஒன்லைன் மூலமாக ஆரம்பித்தும் வைக்கப்பட்டது.
STEAM கல்வித் திட்டத்தமானது,
1999 ஆம் ஆண்டு அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனூடாக பாடவிதான, கோட்பாடுகள் மற்றும் கொள்கைகளை இலகுவான செயற்பாடுகளின் மூலம் அறிய மாணவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது.
இதில், தொழில்நுட்பம், கலை, பொறியியல், விஞ்ஞானம் மற்றும் கணிதப் பிரிவுகள் அடங்குகின்றன.
| Join WhatsApp Group | Click here |
