எட்டு இலட்சம் மாணவர்களுக்கு பாதணி கூப்பன் – கல்வி அமைச்சர்
பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் எட்டு இலட்சம் மாணவர்களுக்கு பாதணிகளைக் கொள்வனவு செய்வதற்காக, 3000/- ரூபா பெறுமதியான கூப்பன்கள் எதிர்வரும் ஓரிரு வாரங்களுக்குள் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நேற்று காலியில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 2024 ஆண்டில் கல்வி முறைமையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய பரீட்சைகள் தொடர்பிலும் விசேட தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன என்றார்.
அதேவேளை கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தொழில்நுட்ப பாடங்களை கற்பிப்பதற்காக 5450 பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Also View: School Holiday News (Click Here)