School Holiday – Full Details

2022 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, 02 வாரங்களுக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளமையால், பாடசாலை விடுமுறை காலத்தை திருத்தியமைப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கு எதிர்வரும் ஏப்ரல் – 17 இல் ஆரம்பமாகும் பாடசாலைத் தவணையானது, மே மாதம் 29 ஆம் திகதி வரை தொடரும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையானது, எதிர்வரும் மே 29 இல் ஆரம்பமாகி, ஜூன் 8ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், புதிய பாடசாலை நேர அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Join Our WhatsApp Group: Click here