Salary Increase for Private Sector

Polish 20231103 200618247

தனியார் துறையினருக்கும் சம்பள அதிகரிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனியார் துறை ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு  தொடர்பில் நேற்று தனியார் துறை உயர் அதிகாரிகளை சந்தித்தார்.

ஆடை, மற்றும் சுற்றுலா போன்ற துறைகளின் உயர் அதிகாரிகளுடன் இக்கலந்துரையாடல் நடாத்தப்பட்டுள்ளது

இதன் போது, எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பத் தேவையான ஆலோசனைகளை அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், இம்மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டம் தொடர்பிலும், அதில் ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலும் ஜனாதிபதி கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், நாட்டைக் கட்டியெழுப்பி பொருளாதாரத்தை மீட்பதே இக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

▪️அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பான விபரம் – (Click here)