Registration of Resident Persons in Sri Lanka under Section 102 of Inland Revenue Act
எதிர்வரும் 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்து வரி செலுத்துனர் அடையாள இலக்கத்தை (TIN NUMBER) வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பதிவு செய்யாமல் இருப்பது 50,000/- ரூபா தண்டப்பணமாக விதிக்கக்கூடிய, தண்டனைக்குரிய ஒரு குற்றமாகும்.
வருடாந்தம் 12 இலட்சத்திற்கு மேல் வருமானம் பெறும் ஒவ்வொருவரும் வரி செலுத்துவதற்கான பதிவை மேற்கொள்ளல் வேண்டும்.
வரி படிவம் நிரப்பும் விதம்
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்தல் மற்றும் வரி எண்ணைப் (TIN) பெறுதல் ஆன்லைனிலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தைப் பார்வையிடுவதன் மூலமும் மேற்கொள்ள முடியும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அனைவரும் Online ஊடாக இலவசமாக TIN க்கு Apply பண்ண முடியும். அல்லது அருகிலுள்ள Regional Office இல் நீங்கள் இதற்கான வழிகாட்டலைப் பெற முடியும்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தனிநபர் பதிவு இலக்கம் பெறுவதற்குத் தேவைப்படும் விபரங்கள்
(01) தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC)
(02) முழுப்பெயர் (ஆங்கிலத்தில்)
(03) முழுப் பெயர் (தமிழில்)
(04) முதல் எழுத்துடன் பெயர் (ஆங்கிலத்தில்)
(05) முதல் எழுத்துடன் பெயர் (தமிழில்)
(06) பிறந்த திகதி மற்றும் பிறந்த நாடு
(07) பால் (ஆண் / பெண்)
(08) தாய் மொழி – (தமிழ் / சிங்களம் / ஆங்கிலம்)
(09) இணையத்தளம் எதையாவது வைத்திருந்தால் அதன் URL
(10) இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டிருந்தால் அது பற்றிய விபரம்
(11) வருமானம் கிடைக்கும் வழி (வியாபாரம் / ஊழியர் / முதலீடு / வேறு வழிகள்)
(12) உங்கள் தொழில்
(13) உங்களது முகவரிக்கு அண்மையில் உள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகம் (உதாரணம் – கொழும்பு)
(14) நிரந்தர முகவரி (ஆங்கிலத்தில்)
(15) நிரந்தர முகவரி (தமிழில்)
(16) உங்கள் முகவரிக்குரிய தபால் குறியீட்டு இலக்கம்
(17) மாகாணம், மாவட்டம், பிரதேச செயலகப் பிரிவு (DS), கிராம சேவகர் (GS) பிரிவுப் பெயர்
(18) வதிவிட முகவரி (அதற்குரிய தபால் குறியீட்டு இலக்கம்)
(19) தொலைபேசி இலக்கங்கள்
(20) மின்னஞ்சல் முகவரி (இருப்பின்)
(21) வங்கிக் கணக்கு விபரம்
(22) குடியியல் நிலை (தனியாள் / திருமணமானவர்)
(23) வாழ்க்கைத் துணையின் பெயர், தேசிய அடையாள அட்டை இல. தனிநபர் வரிப் பதிவு இலக்கம்
(24) பிள்ளைகள் தொடர்பான விபரங்கள்
(25) தனிப்பட்ட வியாபாரம் இருந்தால் அது தொடர்பாகப் பின்வரும் விபரங்கள்
(26) தேசிய அடையாள அட்டையின் (NIC) முன்பக்கம், பின் பக்கம் ஸ்கான் செய்த மூலப்பிரதி, JPG பிரதிகள்- (PDF தேவையில்லை)
வரி இலக்கத்திற்கான விண்ணப்பத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் www.ird.gov.lk எனும் இணையத் தளத்திற்குச் சென்று, வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் ஊடாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குச் சமர்ப்பிக்க முடியும்.
இப்படிவம் புதிதான ஒரு விடயம் அல்ல. நிரப்புவது இலகுவானது. யாரும் இதனை ஒரு பெரும் விடயமாக எண்ணி அச்சப்படத் தேவையில்லை.
குறிப்பு: வீணாக பணம் செலவழித்து இப்படிவத்தை நிரப்பி கொள்ள வேண்டாம். நீங்களாகவே உங்களது தொலைபேசியின் ஊடாகக் கூட இந்தப் படிவத்தை நிரப்ப முடியும்.
2024 ஜனவரி 01 முதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வரி எண்ணைப் (TIN) பெறுவதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.
Apply Online | Click here |
Application (pdf) | Click here |
How to Apply (Download Pdf) | Click here |