பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகள் அமுல்படுத்தப்படாவிடில், நாட்டில் மீண்டும் மின்தடை ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை மாலை நாடு முழுவதும் திடீர் மின்தடை ஏற்பட்டது. மின்னல் தாக்கம் காரணமாகவே இந்த மின்தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த மின் கட்டமைப்புப் பாதையில் உடனடியாக முக்கிய சீரமைப்புகளை மேற்கொள்வது தொடர்பான சில பரிந்துரைகளை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.
ஆனால், அப்பரிந்துரைகள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது என்றும், அவ்வாறு இருப்பது மீண்டும் மின்தடையை ஏற்படுத்தும் என்றும் இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
▪️All Latest Updates: Click here