கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் நியமிக்கப்பட்டு அரச நிறுவனங்களில் பணியாற்றும் 32,000 பேர் நிரந்தர சேவைக்குள்!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவிக்காலத்தில், பல துறைகளிலும் பணிகளுக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 32,000 பேரும் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில், அரச நிரந்தர சேவையில் இணைக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
தற்போது, அவர்கள் அனைவரும் பல்வேறு அரச அலுவலகங்களிலும் இணைக்கப்பட்டு, அவர்களுக்கான உரிய பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், இவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்டவர்களில் ஒரு பிரிவினரை, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் அமர்த்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வெளிநாடு செல்லத் தேவையான தொழில்திறன் பரீட்சைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.