GCE.O/L RESULTS – NEW UPDATE
கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த, “நாளை அல்லது நாளை மறுதினம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படும்” என்று இன்று (29.11.2023) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்துடன், 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை மே / ஜூன் மாதத்தில் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.
அதேவேளை, பரீட்சைப் பெறுபேறுகள் சில நடைமுறை சிரமங்கள் காரணமாக, இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தது.
ஆயினும், பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் 30 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 02ஆம் திகதிகளுக்கு இடையில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்கள வட்டாரங்கள் ஊடாக நேற்று தகவல் கிடைத்தது.
தற்போது பலரும் பரீட்சை பெறுபேறுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். எதிர்பார்க்கப்பட்ட சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் தாமதம் மாணவர்கள் மத்தியில் சற்று கவலையையும், சற்று ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே கல்வி அமைச்சரின் கூற்றுப்படி நாளை வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை பெறுபேறுகள் வெளியாகும் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
▪️சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை எவ்வாறு பார்வையிடுவது? – Click here
▪️உயர்தர நேர அட்டவணை- Click here
▪️புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட – Click here (கிளிக்)
▪️பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு – Click here (கிளிக்)