Download Pdf

அரச உத்தியோகத்தர்களுக்கான இவ்வருட வரவு செலவு திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட சம்பளம் மற்றும் சம்பள அதிகரிப்பு கொடுப்பனவுகளை ஏப்ரல் மாதம் முதல் வழங்க அரசாங்கம் தயாராகி வருகின்றது.

சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாத சம்பளம் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு வழங்கப்படும் போது மேற்படி அதிகரிக்கப்பட்ட சம்பளத்தினை வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன்படி, மார்ச் 21 ஆம் திகதி 2025 வரவு செலவுத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வாரத்தின் பின்னர், அதிகரிக்கப்பட்ட சம்பளம் மற்றும் கொடுப்பனவு வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பெப்ரவரி 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் திரு. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க முன்மொழிந்தார்.

இம்மாதம் 21ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படவுள்ள நிலையில், மார்ச் 28ஆம் திகதிக்கு முன்னர் அதிகரிக்கப்பட்ட சம்பளம் வழங்கும் செய்முறை அடங்கிய சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு வெளியிடவுள்ளது.

இதன்படி, சுற்றறிக்கை வெளியிடப்படுவதுடன், அரச ஊழியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Polish 20250314 061409366