Notice – GS Appointment 2024

கிராம உத்தியோகத்தர் தரம்-3க்கான புதிய ஆட்சேர்ப்பு பெயர்ப் பட்டியல் இன்று (06) உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moha.gov.lk இல் வெளியிடப்பட்டுள்ளது.

கிராம உத்தியோகத்தர் (தரம்-3) ஆட்சேர்ப்புப் போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 03 மாத பயிற்சிக்குத் தகுதி பெற்ற 1,942 விண்ணப்பதாரர்களின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

கிராம உத்தியோகத்தர்களுக்கான புதிய நியமனப் பட்டியலில் உள்ள அனைவரும் மே மாதம் 8ஆம் திகதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு, அரலியகஹா மன்றில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்தவின் பங்கேற்புடன் நியமிக்கப்படவுள்ளனர்.

Polish 20240506 145034820