Nobel Prize 2022

Nobel prize

 

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய ஆறு துறைகளில் சர்வதேச ரீதியில் அளப்பறிய பங்களிப்புச் செய்யும் சாதனையாளர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இது 1901 முதல் ஆல்பிரட் நோபல் என்பவரின் நினைவாக வழங்கப்படுகிறது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் இலக்கிய துறைகளுக்கான நோபல் பரிசு சுவீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்படுகிறது. இதில் அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நோர்வே நாட்டில் வழங்கப்படுகிறது.

01. மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு
(Noble Prize in Medicine)

மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டைச் சேர்ந்த மரபியல் நிபுணரான ஸ்வாண்டே பாபோவுக்கு (Professor Svante Paabo) வழங்கப்பட்டது. அழிந்துபோன மனித இனங்களின் மரபணுக்கள் மற்றும் மனிதப் பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

 

02. இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு
(Noble Prize in Physics)

இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அலைன் ஆஸ்பெக்ட் (பிரான்ஸ்), ஆண்டன் ஜீலிங்கர் (ஆஸ்திரியா) மற்றும் ஜான் எப் கிளாசர் (அமெரிக்கா) ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டது. போட்டான்கள் எனப்படும் கண்ணுக்குத் தெரியாத துகள்கள் பெரிய தூரத்தில் பிரிக்கப்பட்டாலும், அவை ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படலாம் என்ற வழியைக் கண்டறிந்ததமைக்காக இவ்விருது அறிவிக்கப்பட்டது.

03. வேதியியல் துறைக்கான நோபல் பரிசு
(Noble Prize in Chemistry)

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. இது அமெரிக்காவைச் சேர்ந்த கரோலின் பெர்டோசி மற்றும் பேரி ஷார்ப்லெஸ், டென்மார்க்கின் மோர்டன் மெல்டல்  ஆகிய மூவருக்கும் கூட்டாக அறிவிக்கப்பட்டது. உயிர் இயக்கவியலில் மூலக்கூறுகள் மற்றும் செல்களின் ஆய்வுக்காக இப்பரிசு அறிவிக்கப்பட்டது.

 

04. இலக்கியத்துக்கான நோபல் பரிசு
(Noble Prize in  Literature)

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ் (Annie Ernaux) க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. (L’occupation) என்ற நூலை எழுதியதற்காக, இலக்கியத்திற்கான நோபல் பரிசு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.. பாலின பாகுபாட்டிற்கு எதிரான கருத்துக்களை அவரது நூல் ஆழமாகப் பதிவு செய்துள்ளது.

05. அமைதிக்கான நோபல் பரிசு
(Noble Prize in Peace)

அமைதிக்கான நோபல் பரிசானது, இரண்டு அமைப்புகள் மற்றும் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் அலஸ் பியாலியாட்ஸிக்கு (Ales Bialiatski) பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ரஷ்யாவின் மெமோரியல் (Memorial) என்ற மனித உரிமைகள் அமைப்புக்கும்,  உக்ரைனின் சிவில் லிபர்டி (Center for Civil Liberties) என்ற மனித உரிமைகள் அமைப்புக்கும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை ஆவணப்படுத்தும் முயற்சிகளுக்காக அலெஸ் பியாலியாட்டிஸிற்கும், மனித உரிமையைப் பாதுகாத்தல் மற்றும் உக்ரைன் ஜனநாயகத்தை வலுப்படுத்தியமை போன்றவற்றிற்காக உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பிற்கும், ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து நடக்கும் போர்க் குற்றங்களைத் தொடர்ந்தும் உலக அரங்கிற்குக் கொண்டு வந்தமைக்காக ரஷ்ய மனித உரிமைகள் அமைப்புக்கும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுள்ளது.

 

06. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு
(Noble Prize in Economics)

2022 ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசானது, வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடி தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்ட, அமெரிக்காவைச் சேர்ந்த பிலிப் டிவிக், பென் பெர்னாக், டக்ளஸ் டைமண்ட் ஆகிய மூன்று பொருளாதார நிபுணர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அனைத்தும், ஆல்பிரட் நோபல் அவர்களின் நினைவு தினமான டிசம்பர் மாதம் பத்தாம் திகதியன்று வழங்கப்படவுள்ளன.

 

Join WhatsApp Group: Click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *