முஸ்லிம் பெண்கள் ஹபாயா அணிந்து செல்ல தடையில்லை – சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவிப்பு
நாட்டின் எப்பாடசாலைகளிலும் முஸ்லிம் பெண்கள் ஹபாயா அணிந்து செல்லத் தடையில்லை என்று, சட்ட மா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி ஹபாயா விவகாரத்தில்,மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆசிரியை பஹ்மிதா றமீஸ் தாக்கல் செய்திருந்த எழுத்தாணை உத்தரவு கோரும் (Writ) வழக்கு அண்மையில் முடிவுக்கு வந்தது.
கலாசார ஆடையோடு பாடசாலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டுமென, ஆசிரியை பஹ்மிதா மேன் முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
அதேவேளை, தனது கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமைக்காக, கல்லூரியின் அதிபர் விங்கேஸ்வரி ரவி ராஜனுக்கு எதிராக குற்றவியல் வழக்கையும் குறித்த ஆசிரியை தாக்கல் செய்திருந்தார்.
அதிபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சமரச அடிப்படையில் முடிவுக்கு வந்ததிருந்தது.