BUDGET – 2024
▪️2024 ஜனவரி முதல் அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 10,000 ரூபாவால் அதிகரிப்பு – ஜனாதிபதி
▪️ஓய்வு பெற்ற அரச ஊழியர்களின் மாதாந்த ஓய்வூதியம் 2500 ரூபாவால் அதிகரிப்பு
▪️உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் மேற்படிப்பை தொடர்வதற்காக புதிதாக 4 பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை
▪️அங்கவீனம் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு 7500 ரூபாவால் அதிகரிப்பு
▪️2024 ஆம் ஆண்டில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் டிஜிட்டல் மயமாக்கப்படும் – ஜனாதிபதி
▪️பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்யவும் மாகாண மட்டத்தில் தேவையான வசதிகளை ஏற்படுத்தவும் 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு
▪️வடக்கு, கிழக்கில் வீடு இல்லாத குடும்பங்களை மீள்குடியேற்ற 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
▪️வடக்கு கடலில் மீன் அறுவடையை அதிகரிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
▪️2034 ஆம் ஆண்டளவில் சகலருக்கும் ஆங்கில எழுத்தறிவை பெற்றுக்கொடுக்கும் 10 வருட வேலைத்திட்டத்திற்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
▪️பெருந்தோட்ட மக்களுக்கு காணி வழங்கும் வேலைத்திட்டம்
Budget தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள இப்பக்கத்தை இன்னும் சிறிது நேரத்தில் மீண்டும் பார்வையிடுங்கள்.