கொரியாவில் உற்பத்தி மற்றும் கடற்றொழில் துறையில் சுமார் 6,500 பேருக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.
இதற்காக, கொரிய மொழிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எதிர்வரும் மார்ச் மாதமளவில் இப்பரீட்சை நடைபெறவுள்ளது.
வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk ஊடாக இப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.