Important Notice from Department of Examinations

Polish 20230109 124158767

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையினை எதிர்வரும் மே மாதத்தில் நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆயினும், இப்பரீட்சை தொடங்கும் திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என புதிய பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதேவேளை, 2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை தொடர்பான உதவி வகுப்புக்கள், கருத்தரங்குகள், செயலமர்வுகளை நடாத்துவதற்கு ஜனவரி 17 ஆம் திகதி, நள்ளிரவு 12 மணி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ஜனவரி 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.