Government Vacancies

Govt jobs

 

Government jobs

 

ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்ற அரிய வாய்ப்பு!
தற்பொழுது அரச சேவையில் பணியாற்றுவோருக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு இடமாற்றம் பெற அல்லது இணைந்துகொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கீழ் வரும் பதவிகளுக்கு உடனடியாக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
01. முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (MSOs)
02. அபிவிருத்தி உத்தியோகத்தர் (DOs)
03. சாரதி (Drivers)
04. அலுவலக உதவியாளர் (OAs)
சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் பணியாற்றக் கூடிய ஆற்றல் விசேட தகைமையாக கருதப்படுவதோடு குறைந்தபட்சம் இருமொழிகளில் பணியாற்றக் கூடிய ஆற்றல் இருப்பது விசேட தகுதியாக கருதப்படும்.
தெரிவு செய்யப்படும் பணியாளர்களுக்கு ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட சம்பளம் மற்றும் கொடுப்பனவு என்பவற்றுக்கு மேலதிகமாக. அடிப்படை சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு விசேட கொடுப்பனவாக வழங்கப்படும்.
அதற்கமைய, உங்கள் விண்ணப்பங்களை hr@presidentsoffice.lk எனும் மின்னஞ்சலுக்கு 19.10.2022 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் பதவி MSO / DO / Driver / OAs என உங்கள் மின்னஞ்சலிலும் விண்ணப்பப்படிவத்திலும் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
• APPLY NOW: CLICK HERE
• WEBSITE LINK: CLICK HERE
•WHATSAPP GROUP: CLICK HERE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *