General Knowledge – Series 08

Polish 20231116 183316612

பொது அறிவு வினா விடைகள் (தொடர் – 08)

 

(01) உலக தொழிலாளர் தினம் ஒவ்வொரு வருடமும் எத்தனையாம் திகதி கொண்டாடப்படுகிறது?

விடை: மே-01

 

(02) International Labour Organization – (ILO) உலக தொழிலாளர் அமைப்பின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

விடை: ஜெனீவா

 

(03) உலக தொழிலாளர் அமைப்பு (ILO) அமைதிக்கான நோபல் பரிசினை எந்த ஆண்டில் பெற்றுக் கொண்டது?

விடை: 1969

 

(04) உலக பத்திரிகை சுதந்திர சுட்டெண்ணை வெளியிடும் அமைப்பு எது?

விடை: எல்லைகளற்ற செய்தியாளர் அமைப்பு (Reporters Without Borders)

 

(05) இலங்கையில் வெளிவந்த முதல் தமிழ்ப் பத்திரிகை எது?

விடை: உதய தாரகை (1841)

 

(06) ரஷ்யப் புரட்சி மற்றும் சீனப் புரட்சிக்கு வழிகாட்டியாக அமைந்த “மூலதனம்” எனும் பிரபலமான நூலை எழுதியவர் யார்?

விடை: கார்ல் மார்க்ஸ்

 

(07) கார்ல் மார்க்ஸ் எந்த நாட்டில் பிறந்தார்?

விடை: ஜெர்மனி

 

(08) நோபல் பரிசு பெற்ற முதல் ஆசிய நாட்டவர் யார்?

விடை: ரவீந்திரநாத் தாகூர்

 

(09) 1913 இல், ரவீந்திரநாத் தாகூர் தனது எந்தப் படைப்புக்காக, இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார்?

விடை: கீதாஞ்சலி

 

(10) ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் எவ்விரு நாடுகளின் தேசிய கீதங்களை எழுதியுள்ளார்?

விடை: இந்தியா மற்றும் வங்காளதேசம்

 

By: Rafees Safath,
AAL(R), Srilanka Law College,
LLB (R), Open University of Srilanka

GK Series – 09Click here
GK WhatsApp GroupClick here