General Knowledge – Series 07

Polish 20231116 183308609
பொது அறிவு வினா விடைகள் (தொடர் – 07)

 

(01) உலக புவி தினம் ஒவ்வொரு ஆண்டும் எத்தனையாம் திகதி கொண்டாடப்படுகிறது?

விடை: ஏப்ரல்-22

 

(02) உலக புவி தினத்தினை அனுஷ்டிப்பது தொடர்பிலான வித்தினை, 1969 யுனெஸ்கோ மாநாட்டில் முன்மொழிந்தவர் யார்?

விடை: ஜோன் மெக்கனல்

 

(03) “துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவைவிட வீரியமான ஆயுதம் புத்தகம்” என்று கூறியவர் யார்?

விடை: மார்ட்டின் லூதர்கிங்

 

(04) உலக ஆங்கில மொழி தினம் யாருடைய நினைவாக கொண்டாடப்படுகிறது?

விடை: வில்லியம் ஷேக்ஸ்பியர்

 

(05) இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சாதிப்பவர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதை சச்சின் டெண்டுல்கர் எத்தனையாம் ஆண்டு பெற்றார்?

விடை: 1994

 

(06) மலேரியா நோயினைப் பரப்பும் ஒட்டுண்ணி உயிரினம் எது?

விடை: பெண் நுளம்பு (அனோபிலிஸ்)

 

(07) இலங்கை “மலேரியா அற்ற நாடு” என்ற சான்றிதழை, உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து எப்போது பெற்றுக் கொண்டது?

விடை: 2016

 

(08) குச்சிபுடி நடனம் இந்தியாவின் எந்த மாநிலத்தில் புகழ்பெற்றது?

விடை: ஆந்திரா

 

(09) அடால்ப் ஹிட்லர் எந்த நாட்டில், எந்த ஆண்டு பிறந்தார்?

விடை: ஆஸ்திரியா, 1889

 

(10) போரில் ஆற்றிய வீரச்செயலுக்காக ஹிட்லருக்கு எந்த விருது வழங்கப்பட்டது?

விடை: இரும்புச் சிலுவை

 

By: Rafees Safath,
AAL(R), Srilanka Law College,
LLB (R), Open University of Srilanka

GK Series – 08Click here
GK IQ MASTER WhatsApp GroupClick here