பொது அறிவு வினா விடைகள் (தொடர் -06)
(01) இலங்கையில் இறுதி ஆளுனராகவும், முதலாவது ஆளுநர் நாயகமாகவும் இருந்தவர் யார்?
விடை: சேர் ஹென்றிமொங் மேசன்மூர்
(02) “மனிதனுக்கு இது ஒரு சிறு அடி தான், ஆனால் மனித குலத்திற்கு மாபெரும் பாய்ச்சல்” எனும் பிரபலமான கூற்றை கூறியவர் யார்?
விடை: நீல் ஆம்ஸ்ரோங்
(03) இந்தியாவின் முதலாவது ஜனாதிபதி யார்?
விடை: ராஜேந்திர பிரசாத்
(04) சேது சமுத்திரத் திட்டம் எந்த நீரிணையுடன் தொடர்புபட்டது?
விடை: பாக்கு நீரிணை
(05) இலங்கைப் பாராளுமன்றம் எத்தனை உறுப்பினர்களைக் கொண்டுள்ளது?
விடை: 225
(06) சர்வதேச புத்தக தினம் எந்த எழுத்தாளரின் நினைவாக அனுஷ்டிக்கப்படுகிறது?
விடை: வில்லியம் ஷேக்ஸ்பியர்
(07) இலங்கையின் முதலாவது பலநோக்குத் திட்டம் என்ன?
விடை: கல்லோயா
(08) ஒடிசி எனும் உலகப்புகழ் பெற்ற காவியத்தை இயற்றியவர் யார்?
விடை: ஹோமர்
(09) ஆசிரியர்கள் “ஞான விளக்குகள்” எனக் கூறியவர் யார்?
விடை: பிளேட்டோ
(10) பென்சிலின் எனும் மருந்தைக் கண்டுபிடித்தவர் யார்?
விடை: அலெக்சாண்டர் பிளமிங்
By: Rafees Safath,
AAL(R), Srilanka Law College,
LLB (R), Open University of Srilanka
GK Series – 07 | Click here |
WhatsApp Group | Click here |