பொது அறிவு வினா விடைகள் (தொடர் – 01)
(01) ஐக்கிய நாடுகள் சபையினால் சர்வதேச மனித உரிமைகள் தினம் எப்போது பிரகடனப்படுத்தப்பட்டது?
விடை: டிசம்பர் – 10
(02) ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புரையின் படி ‘சிறுவர்’ எனப்படுவோர் யாவர்?
விடை: 18 வயதிற்குட்பட்டோர்
(03) “கண்ணியமான வேலை” எனும் எண்ணக்கருவை அறிமுகப்படுத்திய சர்வதேச நிறுவனம் எது?
விடை: (ILO) சர்வதேச தொழிலாளர் அமைப்பு
(04) டொனமூர் சீர்திருத்தத்தில் எத்தனை வயதிற்கு மேற்பட்டோருக்கு வாக்குரிமை
வழங்கப்பட்டது?
விடை: 21
(05) இலங்கையில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட தேசிய நிறுவனம் எது?
விடை: தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை
(06) ஐக்கிய நாடுகள் சபை எத்தனையாம் ஆண்டு உருவாக்கப்பட்டது?
விடை: 1945
(07) இலங்கையில் காணப்படும் 25 மாவட்டங்களில் பெரிய மாவட்டம் எது?
விடை: அநுராதபுரம்
(08) இலங்கை குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்ட வருடம் எது?
விடை: 1972
(09) மொழிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கம் என்ன?
விடை: 1956
(10) 2023 ஆம் ஆண்டு பிரான்சில் இடம்பெற்ற றக்பி உலகக்கிண்ணத்தை வெற்றி கொண்ட நாடு எது?
விடை: தென்னாபிரிக்கா
By: Rafees Safath,
AAL(R), Srilanka Law College,
LLB (R), Open University of Srilanka
GK Series – 02 | Click here |
Join WhatsApp Group | Click here |