வருடத்தின் சிறப்பு வாய்ந்த விண்கல் மழைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற ஜெமினிட் விண்கல் பொழிவை பார்வையிடும் சந்தர்ப்பம் இன்று இலங்கையர்களுக்குக் கிடைத்துள்ளது.
இன்று 14ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 9 மணிக்குப் பின்னர், ஜெமினிட்ஸ் விண்கல் மழையின் உச்சக்கட்டத்தை இலங்கையர்கள் பார்வையிட முடியும் என ஆர்தர்சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.
ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவானது, இந்த ஆண்டின் மிகச் சிறந்த விண்கல் மழைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இந்த எரிகல் மழை உச்சத்தை அடையும் போது, நூற்றுக்கணக்கான எரிகற்களை ஒரே நேரத்தில் நாம் காண முடியும்.
விண்கற்கள் பூமியின் வளி மண்டலத்துக்குள் நுழைந்ததும் எரிந்து சாம்பலாகும் அதேவேளை, இதனால் ஏற்படுகின்ற நெருப்புச் சிதறல் நட்சத்திரம் புஷ்வாணம் போல சீறிப் பாய்வதாகக் காட்சியளிக்கும்.
இதனை வடக்கு மற்றும் கிழக்கு வானில் இதனை அவதானிக்க முடியும் என்றும், மேகமூட்டமில்லாத, வானம் தெளிவாக உள்ள இடங்களில், தொலைநோக்கிகள் இல்லாமல் வெற்றுக் கண்ணால் பார்வையிட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
▪️Latest Updates: Click here
▪️Join Our WhatsApp Group: Click here