இன்று ஆரம்பமாகும் FIFA உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை ரசிகர்கள் தொலைக்காட்சி மூலம் பார்க்கும் வாய்ப்பு!
FIFA உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் இன்று (நவம்பர் – 20) முதல் டிசம்பர் – 18 வரை கத்தாரில் இடம்பெறவுள்ளன.
இலங்கை ரசிகர்கள் FIFA உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை தொலைக்காட்சியில் நேரடியாகப் பார்க்கும் வசதிகள் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளன.
1930 முதல் FIFA உலக கிண்ணப் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடாத்தப்படுகிறது. 1942 மற்றும் 1946 ஆம் ஆண்டுகளில் உலகப் போர் காரணமாக இப்போட்டிகள் நடைபெறவில்லை. இறுதியாக 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் இடம்பெற்றது.
இம்முறை கத்தாரில் நடைபெறும் 2022 FIFA உலகக் கிண்ணத்தில் ஐந்து குழுக்களைச் சேர்ந்த 32 அணிகள் கிண்ணத்துக்காக போட்டியிடுகின்றன.
கத்தார், சவுதி அரேபியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், அமெரிக்கா, பிரேசில், கனடா, ஸ்பெயின், போர்த்துக்கல், ஆர்ஜென்டினா,
ஈக்வடோர், செனகல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஈரான், வேல்ஸ், மெக்சிகோ, போலந்து, டென்மார்க், துனிசியா, ஜெர்மனி, கோஸ்டாரிகா, ஜப்பான், பெல்ஜியம், குரோஷியா, மொராக்கோ, கமரூன், கானா, தென் கொரியா உருகுவே மற்றும் செர்பியா ஆகிய அணிகள் இம்முறை FIFA உலகக்கிண்ணத்தில் பங்கேற்கின்றன.
2018 இல் ரஷ்யாவில் இடம்பெற்ற FIFA உலகக் கிண்ணப் போட்டியில் கிண்ணம் வென்ற பிரான்ஸ் தற்போது நடப்புச் சம்பியனாக உள்ளது. இரண்டாவது இடத்தை குரோஷியா பெற்றுக் கொண்டது.
மத்திய கிழக்கிலிருந்து ஒரு நாடு FIFA கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை நடாத்துவது இதுவே முதன் முறையாகும்.
2022 FIFA உலகக் கிண்ண போட்டிகளுக்கான இடங்களாக கத்தார் முழுவதுமுள்ள 8 மைதானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆரம்ப ஆட்டமாக அல்கோரில் உள்ள அல்பேட் மைதானத்தில் கத்தார் மற்றும் ஈக்குவடோர் மோதுகின்றன. போட்டியானது, இன்று இலங்கை நேரப்படி இரவு 9:30 மணிக்குத் தொடங்குகிறது.
இலங்கையில் எப்படி பார்ப்பது…
• இலங்கை ரூபவாஹினி
• Dialog TV – Channel 01
• Peo TV – Channel 20
WhatsApp Group | Click here |
Telegram Group | Click here |
FIFA WORLD CUP – 2022 (Watch live on TV)
Sri Lankan fans have the opportunity to watch the FIFA World Cup matches on TV starting today!
The FIFA World Cup will be held in Qatar from today (November – 20) to December – 18.
Sri Lankan fans are now able to watch FIFA World Cup matches live on television.
32 teams from five groups compete for the FIFA World Cup in Qatar.
Qatar, Saudi Arabia, England, Australia, France, USA, Brazil, Canada, Spain, Portugal, Argentina, Ecuador, Senegal, Netherlands, Switzerland, Iran, Wales, Mexico, Poland, Denmark, Tunisia, Germany, Costa Rica, Japan, Belgium, Croatia, Morocco, Cameroon, Ghana, South Korea, Uruguay and Serbia are participating in the FIFA World Cup this time.
France are the current champions after winning the 2018 FIFA World Cup. Second place was taken by Croatia.
This is the first time a country from the Middle East will host the FIFA World Cup. Eight stadiums across Qatar are being used as venues for the 2022 FIFA World Cup.
The opening match will see Qatar vs Ecuador at the Albate Stadium in Algor. The match starts today at 9:30 PM Sri Lanka Time.
How to see in Sri Lanka…
• Sri Lanka Rupavahini Channel
• Dialog TV – Channel 01
• Peo TV – Channel 20